|
திருமண வாழ்த்துக்கள்
நாள்: 06-07-2008
A.முகம்மது இபுராஹிம் பாசித்கனி
A.ஹசினா பானு
முழுமைக்கு இங்கே
கிளிக் செய்யவும் |
| ஐ.ஏ.எஸ்.,
ஐ.பி.எஸ்., தேர்வு எழுத இலவச பயிற்சி
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வு எழுத
விரும்பும் மாணவர்கள் சென்னையில் இலவச
பயிற்சிக்காக விண்ணப்பிக்கலாம் என்று
மனிதநேய அறக்கட்டளை தலைவர் சைதை
துரைசாமி அறிவித்துள்ளார்.
சென்னையில் சைதை துரைசாமி நிறுவியுள்ள
மனிதநேய அறக்கட்டளை ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.
தேர்வு எழுதும் மாணவர்களுக்காக இலவச
பயிற்சி அளித்து வருகிறது. இந்த
பயிற்சியில் கலந்து கொள்ளும்
மாணவர்களுக்கு உணவு, உறைவிடம், பாட
நூல்கள், யோகா பயிற்சி வகுப்புகள்,
சீருடைகள், போக்குவரத்து வசதிகள் என
அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகின்றன.
கடந்த ஆண்டு இந்த அமைப்பில்
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுக்கு 100
மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி
அளிக்கப்பட்டது. அதில் 12 பேர் தேர்வு
பெற்றுள்ளனர். இது மட்டுமல்லாமல்,
தமிழ்நாடு தேர்வாணையக்குழு நடத்தும்
துணை மாவட்ட ஆட்சியர், காவல்துறை
துணை சூப்பிரண்டு போன்ற குரூப்-1
பணிகளுக்கான முதல்நிலை தேர்விலும் 22
மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
கடந்த மே மாதம் இந்த மையத்தின்
சார்பில் 90 மாணவர்கள் முதல் நிலை
தேர்வு எழுதியுள்ளனர். இந்த தேர்வு
முடிவுகள் ஆகஸ்டு மாதம் முதல்
வாரத்தில் வெளியாகிறது. இவர்களுக்கான
முதன்மை தேர்வு பயிற்சி வகுப்புகள்
ஜூலை முதல்வாரத்தில்
தொடங்கப்படுகிறது.முழுமைக்கு இங்கே
கிளிக் செய்யவும் |
விஞ்ஞான
சகாப்தத்தில் உங்கள் சிந்தனைக்கோர் ஒப்பற்ற
விருந்து(வானத்திலிருந்து இறக்கப்பட்ட இரும்புகள்!
)
பூமியில் காணப்படும் இரும்புகள்
அனைத்தும் பூமியில் தாமாகவே
உருவாகவில்லை! மாறாக வானத்தில் வேறு
எங்கிருந்தோ பூமியை நோக்கி வந்தது
என்பது தற்காலத்தில்
கண்டுபிடிக்கப்பட்ட விஞ்ஞான
உண்மையாகும்.ஆனால் இந்தப்
பேருண்மையை 1400 ஆண்டுகளுக்கு முன்னரே
அனைத்துலகங்களைப் படைத்த அந்த இறைவன்
உலக மாந்தர்களுக்கெல்லாம்
நேர்வழிகாட்டிட அவன் இறக்கியருளிய
அவனுடைய சத்தியத் திருவேதத்திலே இதைக்
குறித்து குறிப்பிட்டு மக்கள்
சித்தித்து தெளிபெறுமாறு
அறிவுறுத்துகிறான்.
அல்லாஹ் கூறுகிறான்: -“நிச்சயமாக
நம் தூதர்களைத் தெளிவான
அத்தாட்சிகளுடன் அனுப்பினோம்;
அன்றியும், மனிதர்கள் நீதியுடன்
நிலைப்பதற்காக, அவர்களுடன் வேதத்தையும்
(நீதத்தின்) துலாக்கோலையும் இறக்கினோம்;
இன்னும், இரும்பையும் இறக்கினோம்.
அதில் கடும் அபாயம் இருக்கிறது;
எனினும் (அதில்) மனிதர்களுக்குப் பல
பயன்களும் இருக்கின்றன - (இவற்றின்
மூலமாகத்) தனக்கும், தன்னுடைய
தூதருக்கும் மறைமுகமாகவும் உதவி
செய்பவர் எவர் என்பதையும் (சோதித்து)
அறிந்து கொள்வதற்காக அல்லாஹ் (இவ்வாறு
அருள்கிறான்); நிச்சயமாக அல்லாஹ் பலம்
மிக்கவன், (யாவரையும்) மிகைத்தவன்” (அல்குர்ஆன்:
57:25)
முழுமைக்கு இங்கே
கிளிக் செய்யவும் |
|
செல்போன்கள்
-(அறிவியல் அதிசயம்)
தொலைபேசிகள் இயக்கத்திற்கு வந்த பிறகும்கூட தொலைபேசியின்
மூலம் அழைப்பது என்பது குதிரைக் கொம்பாகவே இருந்தது.
கிராமத்திற்கு ஒரு தொலைபேசியோ அல்லது பல தெருவிற்கு ஒன்றோ
என்று அங்கொன்றும் இங்கொன்று மாகத்தான் இருந்தன. நாளடைவில்
தொலை தொடர்பு துறையில் ஏற்பட்ட வளர்ச்சியின் தாக்கத்தால்
பல வளர்ச்சிகள் ஏற்பட்டு இன்று வீட்டிற்கு ஒரு தொலைபேசி
என்றாகி தொலைது}ர அழைப்புகளுக்கு எஸ்.டி.டி. பூத்துகளுக்கு
செல்வதைக் குறைத்து இன்று மக்களே ஒரு நடமாடும் எஸ்.டி.டி.
பூத்துகளாகவே மாறுவதற்கு காரணமாய் அமைந்தது செல்போனின்
வளர்ச்சி.
செல்போன் ஆரம்பிக்கப்பட்ட ஆரம்பகாலமான 1990-ல் செல்போனின்
எடை இரண்டு கிலோ முதல் இரண்டரை கிலோ வரையும் சார்ஜரின் எடை
1 கிலோ வரையும் இருந்த இது இப்படி படிப்படியாக குறைந்து
இப்போது கிராம் கணக்கில் வந்துள்ளது. இனி வரும்
அத்தியாயங்களில் செல்போன் எவ்வாறு இயங்குகிறது மற்றும்
பலவிதமான நவீன செல்போன்கள் மற்றும் பல்வேறு அம்சங்களை
பற்றிப் பார்ப்போம்.
முழுமைக்கு இங்கே
கிளிக் செய்யவும்
|
|
முதுவை
ஹிதாயத் பக்கம்
முழுமைக்கு இங்கே
கிளிக் செய்யவும்
|
|
SSLC 2008 Results
நமது பள்ளி மாணவர்கள் வழக்கம் போல இந்த வருடமும்
சிறப்பாக எழுதி 98.6 சதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
- A.சமீரா ஃபாத்திமா
486 மார்க் எடுத்து முதல் மாணவியாக வந்துள்ளார்.
- 450 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தவர்கள்:
12
- 400 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தவர்கள்:
35
மாணவர்களின் வெற்றியைப் பாராட்டி தலைசிறந்த
கல்வியாளர் மற்றும் எழுத்தாளர் ஹிமானா அவர்களின் பாராட்டும், தம்பி செள.
அஹமது இபுராஹிம் அவர்களின் வாழ்த்து மடலும்...
இங்கே
முழு விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்
|
|
புதிப்பிக்கப்பட்ட
வாக்காளர் பட்டியல் 2008 சித்தார்கோட்டை ஊராட்சியின்
புதிப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியல் நம் இணையதளத்தில் உள்ளது. பிடிஎஃப்
(pdf)பார்மேட்டில் ஐந்து ஃபைல்களில் உள்ளன. தங்களது பெயர் விவரம் அறிய
தகுந்த ஃபைலலை டெளன்லோடு செய்து பார்க்கவும்.
சித்தார்கோட்டை வார்டு எண்கள்: இரண்டு மற்றும் மூன்று (வடக்கு மற்றும்
மேற்கு)
சித்தார்கோட்டை வார்டு எண்கள்: நான்கு ம்ற்றும் ஐந்து (நடு, கிழக்கு
மற்றும் தெற்கு)
வாழுர், பழனிவலசை மற்றும் முடிவீரன்பட்டினம்
அம்மாரி மற்றும் குலசேகரக்கால்
ஜமீன்தார் வலசை மற்றும் இலந்தைக்கூட்டம்
Check your name in the revised
Electoral Rolls - Summary
Revision 2008 ( Tamilnadu Only )
http://www.eroll.tn.nic.in/pdf/
|
|
நர்கிஸ் - மல்லாரிப் பதிப்பகம்
இணைந்து நடத்தும்
"முகம்மது இஸ்மாயில் -இபுறாஹீம் பீவி நினைவு"
நாவல் - கட்டுரைப் போட்டிகள்
(இஸ்லாமிய வெளிச்சத்தில் மனித நேயம்)
|
இஸ்லாத்தின் பார்வையில் மாதவிடாய் (Audio
- Play & Download)
மாதவிடாய் பற்றிய அவசியமான குறிப்புகள்
மற்றும் ஒழுங்கற்ற மாதவிடாய் உடைய பெண்களின்
வணக்க வழிபாடுகளின் முறைகள் குர்ஆன் -
ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில்
விளக்கப்படுகிறது.
ஆடியோ / வீடியோ இணைப்பிற்கு இங்கே கிளிக்
செய்யவும்
|
| பொருளாதாரத்தில்
பின்தங்கிய மாணவர்களுக்கு உதவித் தொகை
மஸ்கட் வாழ் தமிழ் முஸ்லிம்கள்
சார்பாக ஆண்டுதோறும் தமிழகத்திலுள்ள
வசதி குறைந்த மாணவ மாணவிகளுக்கு கல்வி
உதவி செய்து வருகிறார்கள்.
உயர்நிலை பள்ளிப் படிப்பு முடிந்து
மேல்நிலை பள்ளிப் படிப்பு (+2),
பட்டயப் படிப்பு, பட்டப் படிப்பு,
தொழில் கல்வி, மார்க்கக் கல்வி பயில
பொருளாதார வசதி குறைந்த முஸ்லிம் மாணவ
மாணவியர் தங்கள் விண்ணப்பங்களைக்
கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பித்
தருமாறு கேட்டுக் கொள்ளப்
படுகின்றார்கள்.
List of Organisations
offering Scholarships, Awards and Coaching
for Minorities are listed. Needy students
may apply to avail the facilities.
For
More Details Click here
|
|
மீலாது விழாக்களும் மெளலிது ஷரீபுகளும்
தன் பெற்றோர்,
பிள்ளை மற்றும் எல்லா மனிதர்களை விடவும்
நான் நேசமுள்ளவராக ஆகும் வரை உங்களில்
எவரும் உண்மையான முஃமினாக முடியாது
என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம்: புகாரி
என் உயிர் எவன் கைவசம் இருக்கின்றதோ
அவன் மீது ஆணையாக தன் பெற்றோர் இன்னும்
பிள்ளைகளைவிடவும் நான் நேசமுள்ளவராக
ஆகும் வரை உங்களில் எவரும் உண்மையான
முஃமினாக முடியாது என நபி(ஸல்) அவர்கள்
கூறினார்கள்.
ஆதாரம்: புகாரி
(ஒருநாள்)
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தோம்.
அப்போது நபி(ஸல்) அவர்கள் உமர்(ரலி)
அவர்களின் கையை பிடித்துக் கொண்டிருந்தார்கள்.
அல்லாஹ்வின் தூதரே! என்னைத் தவிர
மற்ற எல்லா உயிரினங்களையும் விட உங்களை
நான் மிகவும் நேசிக்கின்றேன் என உமர்(ரலி)
அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் கூறினார்கள்.
அதற்கு நபி(ஸல்) அவர்கள் என் உயிர்
எவன் கைவசம் இருக்கின்றதோ அவன் மீது
ஆணையாக உன்னை விட நான் மிக நேசமுள்ளவராக
ஆகும் வரை நீர் உண்மையான முஃமினாக
முடியாது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அதற்கு
உமர்(ரலி) அவர்கள் அல்லாஹ்வின் மீது
ஆணையாக இப்போது நீங்கள் என் உயிரை
விடவும் என்னிடத்தில் மிக நேசமானவர்கள்
எனக் கூறினார்கள். அதற்கு
நபி(ஸல்) அவர்கள் இப்போதுதான் நீங்கள்
உண்மையான முஃமீன்
எனக்கூறினார்கள்.
ஆதாரம்: புகாரி
|
சூபித்துவத்
தரீக்காக்கள்.-அன்றும் இன்றும்
(மூன்றாவது
அடிப்படை . இல்மு திக்ரு
பலவீனமான, புனையப்பட்ட ஹதீஸில்
உருவான இல்மு திக்ர் போதனை ...
ஸஹீஹ் என்றால் ஆதாரப்பூர்வமான ஹதீஸாகும்.
நபியவர்களிடமிருந்து தாம் பெற்றதாக நேர்மையான,
நினைவாற்றல் மிக்கஅறிவிப்பாளர்கள் எவ்வித
குளறுபடிகளோ,மாற்றமோ இன்றி அறிவிக்கும்
ஹதீஸ்களே ஆதாரப்பூர்வமாக ஹதீஸ் எனக் கொள்ளப்படும்
.
இதற்கு மாற்றமான ஹதீஸ்கள் பலவீனமான ஹதீஸ்களாகும்.
பலவீனமான ஹதீஸ்களை ஆதாரத்துக்கு எடுக்க
முடியாது என்பதே ஹதீஸ்க்கலை அறிஞர்களின்
ஏகோபித்த முடிவாகும். ஆனால் தப்லீக் பெரியார்களைப்
பொறுத்த வரைக்கும் இது விடயத்தில் எவ்விதக்
கவனமும் இல்லாது அலட்சியமாக நடந்து கொள்வதே
அவர்களின் வழக்கமாகும் .
இவர்கள் போற்றிப் புகழும் ஸூபித்துவப்
பித்தர்களில் ஒருவனான இப்னு அறபி என்பவன்
ஹதீஸ் பற்றி என்ன கூறுகின்றான் பாருங்கள்
...
'எத்தனையோ ஹதீஸ்களை துன்யாவுடைய உலமாக்கள்
ஸஹீஹ் என்று நினைத்து அமல் செய்து கொண்டிருக்கின்றார்கள்
ஆனால் நாங்கள் கஸ்புடைய ஞான நிலையில்
நபிகளை நேரடியாகச் சந்தித்து இந்த ஹதீஸை
நீங்கள் சொன்னீர்களா உங்களுடையதுதானா
? என வினவும்போது இல்லையே ! என்று மறுத்து
விடுவார்கள் . எனவே நேரடியாக நபியிடமிருந்து
கிடைத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில்
நாங்கள் அந்த ஹதீஸின்படி அமல் செய்வதை
விட்டு விடுகின்றோம் . அவ்வாறே பலவீனமான
ஹதீஸை துன்யாவுடைய உலமாக்கள் புறக்கணிக்கின்றார்கள்
.ஆனால் நாங்கள் நபியிடத்தில் நேரடியாக
சந்தித்து இது பற்றிக் கேட்ட வேளை இல்லையே
நான் தானே அதைச் சொன்னேன் என்பார்கள்
. எனவேதான் துன்யாவுடைய குறுகிய அறிவுள்ள
இந்த ஹதீஸ்கலை உலமாக்களின் 'இந்த ஹதீஸ்
பலவீனமானது .அது இட்டுக்கட்டப்பட்டது'
எனும் பேச்சையெல்லாம் நாம் பொருட்படுத்துவதில்லை
என்று உளறுகின்றான் .்.
முழுமைக்கு
இங்கே கிளிக் செய்யவும்
|
| அல்லாஹ் போதுமானவன்!
(ஹிமானாவின்
சிறுகதை) "ஆமினா.. ஆமினாம்மா"
என்றழைத்தார் ஜக்கரியா.
என்னத்தா? இங்கேதானே இருக்கேன்"
என்றாள் அழுது அழுது சோர்ந்து போயிருந்த
ஆமினா.
"சீக்கிரமா கொஞ்சம் வெந்நீர் போடும்மா.
குளிச்சிட்டு ஒரு ரவுண்ட் போயிட்டு வந்துடறேன்"
என்றார்.
ஆமினா பதறினாள். "இந்த நெலமயில நீங்க
வெளியில போக முடியாது அத்தா! சும்மா
படுத்துக்கெடங்க.."
"ஸஹருக்கு ஆக்குன சோறு அப்படியே இருக்கு
மறு உலைப்பாச்சி கஞ்சியாக்கித் தாரேன்"
என்றாள்.
ஜக்கரியா மறுத்து விட்டு எழ முயன்றார்.
மடாரென்று சரிந்தார்.
"அத்தா!" என்ற பிள்ளைகளின் கதறலில்
தெருவே கூடி விட்டது.
வேறு வழியில்லை! இந்த 27ஆம் கிழமை
வருமானம் ஒன்றுமில்லாமல் போய்விட்டது!
தன்னுடைய ஆசையில் - திட்டத்தில் விழுந்த
பேரிடியின் வலியைத் தாங்கிக் கொள்ள முடியாமல்
தினறினார் ஜக்கரியா.
பிள்ளைகள் அருகிலிருந்து மெளனமாய்
அழுது கொண்டிருந்தார்கள்.
முழுமைக்கு
இங்கே கிளிக் செய்யவும்
|
|
முச்சந்தியில் முஷாரப்!. .. -ஹிமானா
- தலையங்கம்
அமெரிக்காவின் தூண்டுதலில் பாகிஸ்தானில்
ஜனநாயகத்தை நிலை நிறுத்தும் நோக்கத்துடன்
முஷாரபுடன் ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டு
தன் தாய்நாட்டுக்குத் திரும்பிய திருமதி
பெனாஸிர் புட்டோ படுகொலை செய்யப் பட்டிருக்கிறார்.
• தாயகம் திரும்பிய அவர் தனது முஷாரப்
ஆதரவு நிலையில் சில மாற்றங்களை பகிரங்கமாக
அறிவித்ததையும், தனக்குப் போதிய பாதுகாப்பை
அவர் தரவில்லை என்றும், தனக்கு எதேனும்
நிகழ்ந்தால் அதற்கு முஷாரபே பொறுப்பு
என்றும் அவர் தான் இறப்பதற்கு இரு நாட்களுக்கு
முன்னர் அமெரிக்காவுக்கு அனுப்பிய ஈமெயிலில்
குறிப்பிட்டிருப்பதும் முஷாரபைக் குற்றவாளியாகக்
காட்டுகின்றன!
• முஷாரப் பதவியிலிருந்து விலக சாமான்யமாக
ஒப்புக் கொள்ளவில்லை. அதிலும் ராணுவத்தலைமைப்
பொறுப்பை விட்டுக் கொடுக்க அவர் சுலபமாக
சம்மதிக்கவில்லை. இருந்தாலும் அமெரிக்காவின்
நெருக்குதலுக்குப் பணிந்தாக வேண்டிய கட்டாயம்!
தேர்தல் மூலம் ஜனாதிபதியாகிக் கொண்டு
பொதுத் தேர்தலை அறிவித்தார். பெனாஸிரின்
கொலையைத் தொடர்ந்து இன்னொரு முன்னாள்
பிரதமர் ஷாநவாஸ் தேர்தலைப் புறக்கணிப்பதாக
அறிவித்திருப்பதால் பாகிஸ்தானில் மீண்டும்
ஜனநாயகம் மலர்வதற்கு மேற்கண்ட முயற்சி
பெனாஸிரின் கோரக்கொலையால் விபத்துக்குள்ளாகி
பரிதாபமாக நிற்கிறது! இதற்குக் காரணமாக
முஷாரபையே உலகம் குற்றம் சாட்டும்!
• பெனாஸிரின் கொலையால் பாகிஸ்தானில் மூண்டிருக்கிற
கலவரங்கள் எற்கனவே பல உயிர்களைக் காவு
கொண்டுள்ளன. இதன் தீவிரம் இன்னும் பரவலாகவும்
பயங்கரமாகவும் அதிகரிக்க வாய்ப்புள்ள
பொதுச்சூழலே அங்கு நிலவுவதால், அதற்கான
பழியும் முஷாரபின் மீதுதான் விழும்!
.முழுமைக்கு
இங்கே கிளிக் செய்யவும்
|
|
வாக்குமூலம்
|
'நான்' என்பது உலகமாயிருந்தது!
பால் எது? சுண்ணாம்பு எது?
விளங்காத போது
'நான்' என்பது உலகமாயிருந்தது.
சூழ்ந்து கடிக்க வந்தன
சுயநலங்கள்.
ஒதுங்கி ஒடுங்கியதில்
'நான்' என்பது தானாய் ச்சிறுத்தது.
இப்போதும்...
இருட்டும் போதெல்லாம்
வழிகளின் பயத்திலோ
வலிகளின் உணர்விலோ
உறவை, நட்பை உள் வாங்கி
'நான்' சற்றே விரிவதுண்டு.
|
முழுமைக்கு இங்கே
கிளிக் செய்யவும்
|
இஸ்லாம் கூறும் சமூக ஒற்றுமை!
அன்று உயர்
குலத்தைச் சார்ந்த அபூபக்கர், உமர், உஸ்மான்
(ரலி) ஹப்பாப் (ரலி) போன்றோருக்கு - தன்
நாட்டை, வீட்டை, மனைவி, மக்களைத் துறந்து
சென்ற முஹாஜிர்களுக்கு - அனைத்திலும்
சரி பாதி தருகிறோம் என்று சொன்ன அன்ஸாரிகள்
அனைவரும் மனித நேயத்தின் ஊற்றுகள்.
இப்படிப்பட்ட உயர்ந்து பரந்த தியாக மனப்பான்மை
அந்த அறியாமைக்காலத்து மக்களிடம் வரக்
காரணம் இஸ்லாம். இஸ்லாம் என்றால் கட்டுப்படுதல்.
தன்னுள் புகும் ஒவ்வொரு மனிதனையும் கட்டுப்பாட்டுக்குள்
நுழைத்துக் காத்து வந்தது இஸ்லாம். கட்டுப்பாடு
என்றால் சிறையில் அடைத்து, சித்திரவதை
செய்யும் கட்டுப்பாடன்று. மாறாக, சுதந்திரக்
காற்றைச் சுவாசிக்கச் செய்யும் கட்டுப்பாடு.
வார்த்தை
பேசுதல் முதல் வழக்காடுவது வரை, உண்ணுதல்
முதல் உறங்குதல் வரை கற்றுத் தந்து மனிதப்
பிறவியைக் கண்ணியப்படுத்துகிறது இஸ்லாம்.
முழுமைக்கு இங்கே
கிளிக் செய்யவும்
|
|
சர்க்கரை நோயை கோவக்காய் கட்டுப்படுத்துகிறது
பெங்களூரைச் சேர்ந்த பொது மக்கள் சுகாதாரம்
மற்றும் மருத்துவ ஆய்வுக் குழு மருத்துவர்கள்
கோவக்காயை பொடியாக்கி சாப்பிடும் முன்
சர்க்கரை அளவு 200-க்கும் குறைவாக உள்ள
30 புதிய சர்க்கரை நோயாளிகளுக்கு தினமும்
ஒரு கிராம் கொடுத்து வந்தனர். அந்த ஒரு
கிராம் பொடி, கோவக்காய் பச்சையாக 15 கிராம்
சாப்பிடுவதற்கு சமம். இவ்வாறு 3 மாதம்
நோயாளிகள் சாப்பிட்டனர். அதன் பிறகு அவர்களுக்கு
ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைப்
பரிசோதித்ததில் சர்க்கரையின் அளவு மிகவும்
குறைந்து இருந்ததைக் கண்டுபிடித்தனர்.
தினமும் 50 கிராம் சமைத்த கோவக்காய் சாப்பிட்டால்
சர்க்கரை நோய் குறையும் என்று அந்த ஆய்வுக்
குழு தெரிவித்துள்ளது.
முழுமைக்கு இங்கே
கிளிக் செய்யவும்
|
|
குழந்தைகளும் தொலைக்காட்சியும்
குழந்தையிடம்
தொலைக்காட்சியின் ஆதிக்கம் மற்றும் விபரீதம்
பற்றிய ஒரு ஆய்வு புகழ்பெற்ற மிச்சிங்காம்
பல்கலைகழகத்தில் மேற்கொள்ளப்பட்டது. மிகவும்
அதிர்ச்சிகரமான தகவல்களை அது வெளியிட்டுள்ளது.
1. சாதாரணக் குழந்தை பள்ளியில் செலவழிக்கும்
நேரத்தைக் காட்டிலும் தொலைக்காட்சியில்
அதிக நேரம் செலவழிக்கிறது.
2. சராசரியாக ஒருவாரத்திற்கு 20 மணிநேரம்
தொலைகாட்சியில் செலவழிக்கிறது. இது மற்ற
எல்லா செயல்களைக் காட்டிலும் அதிகமாகும்.
( தூங்குவதைத்தவிர ).
3. சராசரியாக 70 வயது நிரம்பிய மனிதன்
7 முதல் 10 ஆண்டுகள் வரை நேரத்தை தொலைக்காட்சியில்
செலவு செய்கிறான்.
4. விளம்பரங்கள் குழந்தைகளை இலக்காக வைத்து
தயாரிக்கப்படுகின்றன.
மாதந்தோறும் ஆயிரக்கணக்கான வியாபார விளம்பரங்கள்
தயார் செய்யப்படுகின்றன.
5. ஒருவருடத்திற்கு 1000 முதல் 2000 வரையிலான
போதை சம்பந்தப்பட்ட விளம்பரங்களை குழந்தைகள்
பார்க்கின்றன.
முழுமைக்கு இங்கே
கிளிக் செய்யவும்
|
| |
அரைமணி நேரத்தில்
சிஸேரியன் ...ஓப்பன் ஈத்தரில் மயக்கமருந்து!
(ஊற்றுக்கண்)
மயக்க மருந்து கொடுக்க 'பாயில்
அப்பரட்டஸ்' அப்போது இராமநாதபுரத்தை எட்டியிருக்கவில்லை.
ஈத்தர் என்ற மருந்தைத்தான் உபயோகித்தாக
வேண்டும். ஒரு 'காஸ்துணி' பேடை நோயாளியின்
முகத்தில் போர்த்தி கொஞ்சம் கொஞ்சமாக
ஈத்தரை ஊற்ற வேண்டும். சில நிமிடங்களுக்கொருமுறை
நோயாளியின் மூச்சு - நாடித்துடிப்பு -இதய
இயக்கம் போன்றவற்றைத் தொடர்ந்து கண்காணித்துக்
கொண்டு நான் மயக்க மருந்து கொடுக்க ,
டாக்டர் அப்துல்லாஹ் சுறுசுறுப்பாக இயங்கி
அரை மணிநேரத்தில் அறுவை சிக்கிச்சை செய்து
குழந்தையை வெளியில் எடுத்தார்.
குழந்தை உடனே அழவில்லை. பிரசவப் பாதையின்
கடைசிப் பகுதியில் மாட்டிக்கொண்டு அதிக
நேரம் இருந்ததால் குழந்தை உடனே சுவாசத்தைத்
தொடங்கவில்லை.
முழுமைக்கு இங்கே
கிளிக் செய்யவும் |
தபால்
வழி இஸ்லாமியப் படிப்பு
( ஜாமியா
மில்லியா கமாலியா - இஸ்லாமிய அஞ்சல் வழிக்
கல்வி நிறுவனம்)
இருக்கும்
இடத்தில் இருந்து கொண்டே ஓய்வு நேரத்தில்
தபால் மூலம் மார்க்க கல்வி + உலகக் கல்வி
இணைந்த வாழ்க்கை கல்வியை கற்ற அவரவர்
பகுதியில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில்
பட்டம் பெறலாம் - வெளிநாடு உட்பட. 18
வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், வயது வந்த
திருமணமான பெண்கள், தமிழ் எழுத, வாசிக்கத்
தெரிந்த அனைவரும், உலகின் எந்தப் பகுதியில்
இருந்தாலும் படிக்கலாம்.
முழுமைக்கு இங்கே
கிளிக் செய்யவும் |
திருக்குறள் _ அங்கில மொழியாக்கத்துடன்
- வார்த்தை அல்லது அதிகாரம் மூலம்
தேடும் வசதி
- ஆங்கில மொழியாக்கம்
முழுமைக்கு இங்கே
கிளிக் செய்யவும் |