Word Search in Tamil Bukhari - Chittarkottai.com

Home Bukhari (English) தமிழ் புகாரி Mail Us Introduction
பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5953

அபூ ஸுர்ஆ இப்னு அம்ர் இப்னி ஜரீர்(ரஹ்) கூறினார் நான் அபூ ஹுரைரா(ரலி) அவர்களுடன் மதீனாவில் ஒரு வீட்டினுள் நுழைந்தேன். அதன் மேல் தளத்தில் உருவப் படங்களை வரைவபவர் ஒருவர் உருவங்களை வரைந்து கொண்டிருந்தார். அப்போது அபூ ஹுரைரா(ரலி), 'என் படைப்பைப் போன்று படைக்க எண்ணுபவனை விட அக்கிரமக்காரன் வேறு யார் இருக்கமுடியும்? அவர்கள் ஒரு தானிய விதையையாவது படைத்துக் காட்டட்டும். ஓர் அணுவையாவது படைத்துக் காட்டட்டும் என்று (அல்லாஹ் கூறுவதாக) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சொல்ல கேட்டேன்' என்றார்கள். பிறகு (அங்கசுத்தி செய்வதற்காகத்) தண்ணீருள்ள பாத்திரம் ஒன்றைக் கொண்டுவரச் சொல்லி தம் இருகைகளையும் அக்குள் வரை கழுவினார்கள். நான், 'அபூ ஹுரைரா அவர்களே! இது (அக்குள் வரை கையைக் கழுவுவது), அல்லாஹ்வின் தூதரிடமிருந்து நீங்கள் செவியுற்ற விஷயமா?' எனக் கேட்க, அவர்கள், '(அங்கசுத்தி செய்யப்படும் உடலுறுப்புகள் மறுமையில் வெண்மையாகும்போது அக்குள்வரை) வெண்மை பரவும்' (என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்) என்றார்கள்.

Back to Search Page

www.chittarkottai.com