|
நமது முகம்மதியா மேல்நிலைப்
பள்ளியின் வெள்ளிவிழாவினை சிறப்பாகக் கொண்டாட முடிவு மேற்கொண்டபோது,
அதன் தொடர்பில் ஒரு சிறப்பு மலர் வெளியிடவும் தீர்மானிக்கப்பட்டது. நான்
அம்மலர்க்குழுவின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டேன். அம்மலரில் சித்தார்
கோட்டையின் வரலாறு முடிந்தவரை சுருக்கமாக வெளியிடவும் முடிவு
செய்யப்பட்டு, வெளிவந்தது.
அப்பணியினை சிறப்பாகச் செய்யக்
கூடியவர்கள் யார் என்று பரிசீலித்து இப்போது சித்தார்கோட்டை.காம்
தளத்தில் இந்த ஆய்வுக்கோவையை எழுதும் ஆசிரியர் அவர்கள் வசம்
ஒப்புவிக்கப்பட்டது. அவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் அப்பணியைச் செய்து
முடித்து மலர்க்குழுவிடம் ஒப்படைத்தார்கள். மலர்க்குழுவுடன் பள்ளி -
ஜமாஅத் நிர்வாகக் குழுக்களும், ஊரின் அப்போதைய மூத்த வயதுப் பெரியார்கள்
அனைவரும் அமர்ந்து பரிசீலனைக்குப்பின் அவ்வாய்வின் ஒரு பகுதி மட்டும்
மலரில் இடம் பெறச் செய்யப்பட்டது. மலரில் இடம் போதாமையே சுருக்கமாக
வெளியிடக் காரணம்.
அந்த ஆய்வு இப்போது முழுமையாக நமது
தளத்தில் வெளிவரும் செய்தியை சகோதரர் ஹாஜா மொய்னுதீன் அவர்கள்
தெரிவித்த போது மிக்க மகிழ்ச்சியடைந்தேன். அது நம்மூர் மக்களுக்குத்
தெரிந்திருக்க வேண்டிய முக்கிய வரலாறு.
இதனை எழுதியிருக்கும் பெரியார் சி.அ.அ. முஹம்மது அபூதாஹிர்
அவர்கள் என் ஆசிரியர். அரபி, உர்தூ, இந்தி,
தமிழ், ஆங்கிலம், பர்மீஸ் இப்படி பல மொழிகள் எழுதப் படிக்கத்
தெரிந்த அறிஞர்.
சித்தார்கோட்டையில் பிறந்து பல
துறைகளிலும் திறமை பெற்றிருந்த அறிஞர் பெருமக்கள் வரிசையில் இன்றும்
நம்முடன் வாழ்ந்துவரும் அன்னாருக்கு நாம் அனைவரும் கடமைப் பட்டுள்ளோம்.
இந்த அரிய முயற்சியை மேற்கொண்ட
அன்னாருக்கு நம் நன்றி.
டாக்டர் ஹிமானா சையத்,
சிங்கப்பூர் - 14 ஆகஸ்ட் 2009
|