மறைவு அறிவிப்பு

 

ஊரில் சில மரணங்கள் - சில நினைவுகள்.. ஹிமானாவின நினைவலைகள்..

  குத்புதீன் புதுவலசை

12/05/2008

 
 
புதுவலசை முன்னாள் கிராம அதிகாரியும், முன்னாள் ஜமாஅத் தலைவருமான ஜனாப் குத்புதீன் அவர்கள் 10 -05- 2008 அன்று காலமான செய்தி அறிந்தேன்.

சென்ற டிஸம்பரில் தாயகம் சென்றிருந்த போது நோய்வாய்ப் பட்டிருந்த அன்னாரை அவரது இல்லம் சென்று உடல்நலம் விசாரித்தேன்.

தோற்றத்தில் கம்பீரமான அந்த அம்மனிதர் தமது ஊருக்கும் நமது பகுதிக்கும் ஏராளமான பொதுச் சேவைகள் செய்திருக்கிறார்.

குறிப்பாக அழகன்குளத்தில் எதிர்பாராமல் நிகழ்ந்த ஒரு வன்முறையின் போது அவ்வூரின் ஜமாஅத் தலைவர் உட்பட ஆண்கள் அனைவரையும் காவல்துறை வழக்கில் சேர்த்த போது கைது செய்யப் பட்டவர்களை ஜாமீனில் எடுக்க சுமார் 250 ஜாமீன் தாரிகள் தேவைப் பட்டனர். அப்போது நம் பகுதியைச்  சேர்ந்த அனைத்து கிராம நிர்வாகிகளையும் ஒருங்கிணைத்து 24 மணிநேரத்தில் அதனைப் பெற்றுத் தர அவர் செய்த உதவி மகத்தானது. அப்போது நான் ஐக்கிய முஸ்லிம் ஜமாஅத்துக்கள் சபையின் தலைவராக இருந்தேன்.

போலீஸ் ஊரையே சூழ்ந்திருந்த அந்த ஜாமத்தில் நானும், அண்ணன் குத்புதீன் அவர்களும் அண்ணன் அப்துல் பாரி அவர்களூம் ஊருக்குள் நுழைந்து ஊரில் வீடுகளில் தங்கியிருந்த ஒரு சில ஜமாத் தலைவர்களில் ஒருவரான முன்னாள் தாசில்தார் காஜி வெ.மு. அவர்களைச் சந்தித்து ஆலோசனைகள் பெற்றது இன்றும் பசுமையாய் மனதில் நிற்கிறது.

அன்னாரின் பிழைக்களைப் பொறுத்து அல்லாஹ் நற்பதவியளிப்பானாக, ஆமீன்!

அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் என் ஆறுதல்களைப் பதிவு செய்கிறேன்.
 -டாக்டர்  ஹிமானா சையத்
சிங்கப்பூர்
12-05 - 2008

 
  முகமது யூனுஸ் சித்தார்கோட்டை

25/04/2008

 
 

முகமது யூனுஸ் (மாடுவெட்டி) அவர்கள் 25-04-2008 அன்று இரவு சித்தார்கோட்டையில் காலாமானார்கள். ( இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் ). 26-04-08  சித்தார்கோட்டையில்  அன்று காலை நல்லடக்கம் செய்யப்பட்டது.
மகன்கள்: முகம்மது அலி கான், அகமது கபீர், அமீர் அப்பாஸ்


அண்ணன் முகம்மது யூனூஸ் அவர்கள் காலமான செய்தியினை நமது இணையதளத்தில் படித்தேன். அல்லாஹ் அவர்களது பிழைகளைப் பொறுத்து நற்பதவியளித்து அருள்வானாக. அன்னாரது குடும்பத்தினருக்கு அவர்களது இழப்பினைத் தாங்கிக் கொள்ளும் பொறுமையினை நல்குவானாக, ஆமீன்.

அன்னார் தோற்றத்தில் வலிமையானவராக இருந்தாலும் பழக்கவழக்கங்களால் மிகவும் மென்மையானவர். எல்லோருக்கும் இனியவர்.

வாலிப முஸ்லிம் தமிழ்க்கழகப் பணிகளாகட்டும், ஜமாஅத் காரியங்களாகட்டும் மகிழ்ச்சியுடன் முன்வந்து பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டு அதனைக் கச்சிதமாகச் செய்து முடிப்பதில் அக்கறை காட்டுபவர்.

சமீபத்தில் நான் தாயகம் வந்திருந்த போது அவர் நோய்வாய்ப்பட்டிருக்கும் செய்தி தெரிந்தேன். அத்தனை வலிகளையும் தாங்கிக் கொண்டு புன்னகை மாறாமல் அன்புடன் அளவலாவிக் கொண்டார்.

இளம் வயதில் அவருடன் நானும் என் நண்பர்களூம் பொதுப்பணிகளில் ஈடுபட்ட அந்த நாட்களை எண்ணிப் பார்க்கிறேன்.

அண்ணன் யூனூஸ் அவர்கள் யாருக்கும் தொந்தரவு கொடுக்காத - யாரையும் புண்படுத்தாமல் வாழத் தெரிந்த மிக நல்ல மனிதராக நம்மால் நினைவு கூறப்படுவார்.

-டாக்டர் ஹிமானா சையத்
சிங்கப்பூர்
27 -04 - 2008


 
  A. துல்கமான் பினேங்க்

15/01/2008

 
 

மர்ஹும் ஹாஜி S.M.J. அமானுல்லாகான் அவர்களின் அண்ணன் மர்ஹும் அபுல் காஷிம் அவர்களின் மகன் துல்கமான் அவர்கள் பினேங்கில் இன்று காலமானார்கள்.  ( இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் )

 

  மெளலவி முஹம்மது முபாரக் ஆலிம் மதினா

03/01/2008

 
 

மெளலவி முஹம்மது முபாரக் ஆலிம் மன்பஈ (பனைக்குளம் மர்ஹும் சையது முஹம்மது பாபா அவர்களின் மகன்) அவர்கள் சவுதி அரேபியாவின் மதினா நகரில் வியாழக்கிழமை ( 03 ஜனவரி 2008 ) நண்பகல் மரணமடைந்தார். ( இன்னாலில்லாஹி வ இன்னா)இலைஹி ராஜிவூன் ). (67 வயது)

புனித ஹஜ் கடமையை நிறைவேற்றி விட்டு மதினா நகருக்கு ஜியாரத் செய்வதற்காக முபாரக் ஆலிம் சென்றிருந்தார். அன்னாரது ஜனாஸா வியாழக்கிழமை இரவு மதினா நகரில் நல்லடக்கம் செய்யப்படும்.

 
   
   
 
 
  ஹாஜிமா அபுரானியா பனைக்குளம்

21/10/2007

 
 

பனைக்குளம் நிஜாம் டிரான்ஸ்போர்ட்ஸ் உரிமையாளர் ஹாஜி எஸ். பகாவுத்தீன் அவர்களது மனைவி ஹாஜிமா அபுரானியா அவர்கள் 21 - 10 - 2007 ஞாயிறு அதிகாலை 4.40 மணியளவில் அல்லாஹ்வின் அளவில் மீண்ட்டார்கள் என்ற செய்தியினை மிகுந்த வருத்தத்துடன் பதிவு செய்கிறோம். எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களது பிழைகளைப் பொறுத்து நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்க்குமாறு பிரார்த்திக்கிறோம்.
செய்தி: டாக்டர் ஹிமானா சையத்

 பஹாவுதீன் அவர்களின் தொடர்பு: 91 - 4567 -269249, +919443491733

 
   
   

  ஷராஃபத் நிஸா சித்தார்கோட்டை

19/09/2007

 
 

மர்ஹும் கோசுக்கோப்பை யூசுஃப் அவர்களின் மகன் கலீலுர் ரஹ்மன் அவர்களின் மனைவி ஷராஃபத் அவர்கள் 19-09-2007 அன்று காலாமானார்கள். (இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்). அன்று இரவு சித்தார்கோட்டையில் அடக்கம் செய்யப்பட்டது..

கணவன்: கலீலுர் ரஹ்மான் தொலைபேசி: +919486275703, +914567261265

 
   
   

  காஜா முஹைதீன் சித்தார்கோட்டை

24/12/2006

 
 

சித்தார் கோட்டை நா.முகமது ஹனிபா நல்லத்தா அவர்கள் மகன் காஜா முஹைதீன் அவர்கள் 24/12/2006 அன்று வபாத்தாகிவிட்டார்கள் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன் அன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
அறிவித்தவர் H.முஹம்மது ஸலாஹுதீன். துபாய்

 

  மஹ்மூதா பீவி சித்தார்கோட்டை

6-12-2006

 
 

மர்ஹும் ஹாஜி M.S.M.முஹம்மது களஞ்சியம் அவர்களின் மூத்த மகளான மஹ்மூதா பீவி அவர்கள் தனது 89வது வயதில் 6-12-2006 அனறு காலாமானார்கள். (இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்). அன்று மாலை சித்தார்கோட்டையில் அடக்கம் செய்யப்பட்டது.

 
 
 
  ஹசன் குத்தூஸ் மலேசியா

6-12-2006

 
 

ஹசன் குத்தூஸ் (மர்ஹும் அலாவுதீன் அவர்களின் மகனார்)அவர்களின் கோலாலும்பூரில் 5-12-2006 ல் காலாமானார்கள். (இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்). கோலாலும்பூரில் அடக்கம் செய்யப்பட்டது.

 
 
 
  P.S.K சீனி முஹம்மது சித்தார்கோட்டை

118-10-2006

 
 

P.S.K. சீனி முஹம்மது அவர்கள் இன்று சித்தார்கோட்டையில் காலமானார்கள். (இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்).

 
         
  அப்துல் முஃமீன் மலேசியா

115-10-2006

 
 

அப்துல் முஃமீன் (பீர்வா) அவர்கள் கோலாலும்பூரில் காலமானார்கள். (இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்)

 
         
  ஷம்சு நிஸா சித்தார்கோட்டை

16-9-2006

 
 

டீ கடை நெய்னா முஹம்மது அவர்களின் மனைவி இன்று காலமானார்கள். (இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்). மகன் சித்தீக் (+60168235432)

 
         
  டீகடை தாஜுதீன் சித்தார்கோட்டை

15-9-2006

 
 

டீ கடை  தாஜுதீன் அவர்கள் (நெய்னா முஹம்மது அவர்களின் சகோதரர்) நேற்று சித்தார்கோட்டையில் காலமானார்கள். (இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்).

 
         
  காலிதா பேகம் சித்தார்கோட்டை

18-7-2006

 
 

V.N.K.S. துல்கர்ணைன் அவர்களின் மனைவியும் ரியாய் அவர்களின் தாயுமான காலிதா பேகம் அவர்கள் 18-07-2006 ல் காலாமானார்கள். (இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்). இன்று சித்தார்கோட்டையில் அடக்கம் செய்யப்பட்டது. (+914567261478) ரிபாய்: +966507258934


 
         
  மா.சீ.அ. செளகத் அலி சித்தார்கோட்டை

16-7-2006

 
 

எங்களது தகப்பனார் மா.சீ.அ. செளகத் அலி அவர்கள் நேற்று இரவு சித்தார்கோட்டையில் காலமானார்கள்.(இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்). இன்று சித்தார்கோட்டையில் 10.30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்பட்டது.

மகன்கள்:
ஜாவீத் அலியார் (+60129282106) - சீனி ஃபக்கீர் (+966508233955) - அஹமது இபுறாகிம்  (+966561570634)
Thanks a lot for your condolence message regarding my Beloved Father's demise and all we could do for him is to pray the Al Mighty Allah to give him a great place in the Heaven after forgiving him.

Though the expired personnel would not be able to do anything for the alives, at least we could make Dua for them to make everything in the hereafter life easy and let them reach to heaven.

Really we must be very thankful to everyone those have met personally, calling through Telephone, sending SMS and made our distressing heart to be relaxed by their condolences.

Allah is the Great.

Shukran Jasakallah.

Very faithfully,
Jawith, Seeni and Ahmed.

 
         
  பாத்திமா பீவி சித்தார்கோட்டை

29-04-2006

 
 

கடை கிஸார் முகம்மதின் தாயார் பாத்திமா பீவி அவர்கள் காலாமானார்கள். சித்தார்கோட்டையில் அன்று காலை 10  மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது. (இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்).


 
         
  முஹம்மது காசிம் மலேசியா

12-04-2006

 
 

காசியார் என்று அன்பாக எல்லோராலும் அழைக்கப்டும் சகோதரர் முஹம்மது காசிம் அவர்கள் (ஃபஹாத்தின் வாப்பா) மலேசியாவில் காலாமானார்கள். (இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்).


 
         
  VKS வைசுல் கர்ணைன் மலேசியா

28-2-2006

 
 

என்னுடைய தாயார் மன்சூரா பீவி அவர்கள் 31-5-2005  அன்றும் எனது அருமை தந்தை VKS வைசுல் கர்ணைன் அவர்கள் 28-02-2006 லிலும் மறைந்து விட்டனர். அவர்களுக்காக இறைவனிடம் பிராத்திக்கவும். நாங்களும் சித்தார்கோட்டையைச் சேர்ந்தவர்கள் தான். இது மிகவும் பெருமைக்குறியதாகும்.

இப்படிக்கு மகள் : ஆயிஷா பானு


 
         
  வஸீர் மஹ்முது சித்தார்கோட்டை

11-11-2005

 
 

மர்ஹும் எஸ் சீனி முஹம்மது அவர்களின் மகன் வஸீர் மஹ்முது அவர்கள்  இன்று இரவு மருத்துவமனயில் காலமானார்கள். (இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்).
அவரது சகோதரர் தாஜ் மஹ்மூது:
261714
 


 
         
  அஹமது கான் சித்தார்கோட்டை

15-08-2005

 
 

அண்ணன் அஹமது கான் (மக்கான்) அவர்கள் சித்தார்கோட்டையில் இன்று காலமானார்கள். (இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்) சித்தார்கோட்டையில் இன்று மாலை 5 30  மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.


 
         
  அப்துல் கயூம் சித்தார்கோட்டை

08-08-2005

 
 

பைராம் கான் மற்றும் ஹுசைன் கலீல் அவர்களின் தந்தையார் அப்துல் கையூம் அவர்கள் கடந்த வாரம் சித்தார்கோட்டையில் காலமானார்கள். (இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்) சித்தார்கோட்டையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.


 
         
  யூசுஃப் (அண்ணா வாத்தியார்) சித்தார்கோட்டை

18-07-2005

 
 

நமது முஹமதியா பள்ளியில் கைத்தொழில் ஆசிரியராகப் பணிபுரிந்த அண்ணா வாத்தியார் என்று அழைக்கப்படும் யூசுஃப் அவர்கள் கடந்த 18-07 காலமானார்கள். (இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்). சித்தார்கோட்டையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவர்களது மகனார்கள்: சீனி முஹம்மது மற்றும் சபீ: 00966 508971994.


 
         
  அலாவுதீன் ஆலிம் பாக்கவி சித்தார்கோட்டை

08-07-2005

 
 

நமது ஊரில் 27 ஆண்டுகளாக இமாமாக பணிபுரிந்து சமீபத்தில் ஓய்வு பெற்ற மெளலானா மெளலவி அலாவுதீன் ஆலிம் பாக்கவி அவர்கள் இன்று மாலை சித்தார்கோட்டையில் வபாத்தாகி விட்டார்கள். (சொந்த ஊர் சித்தயன்கோட்டை). (இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்).

செய்தி அளித்தவர்: ஹாரிஸ் சுல்தான்.

அண்ணார் பற்றி ஹிமானா சையத்தின் கருத்து:

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

கண்ணியத்துக்குரிய மௌலானா மௌலவி அலாவுதீன் பாகவி அவர்கள் இறையழைப்பில் மீண்ட செய்தி இரவு சுமார் எட்டரை மணியளவில் கிடைத்தது. சுமார் 27 ஆண்டுகளுக்கு முன்பு அவர்களை பேஷ் இமாமாகத் தேர்வு செய்த கமிட்டியில் நானும் உறுப்பினராக இருந்தேன்.
அன்று தொட்டு அவர்களுடன் நான் தனிப்பட்ட முறையில் கொண்டிருந்த நட்பின் பின்னணியில் நினைவுகளை அசைபோட்டேன்.

மேலோட்டமாகப் பார்ப்பவர்களுக்கு அவர்கள் பல வருடங்கள் நம்மூரில் பணியாற்றிய ஆலிம் என்ற வகையில் பொதுவான மரியாதை இருக்கும்.அவர்களுடன் நெருங்கிப் பழகி- அவர்களது மார்க்க அறிவைப் பகிர்ந்து கொண்டவர்களுக்கு மட்டுமே அவர்களின் மகத்துவம் புரியும்.
இன்று என்னைப் போன்றவர்கள் இந்த அளவுக்கு மார்க்க மேடைகளில் புகழ் பெறுவதற்கு அவர்களது ஜும்மாப் பேருரைகள் அடித்தளமிட்டுக் கொடுத்தன என்பதை பகிரங்கமாக ஒப்புக் கொள்வதற்கு நான் கொஞ்சமும் தயங்கமாட்டேன்.அவ்ர்களது உரையில் அனாவசியமான எந்த வார்த்தையும் இருக்காது.தடுமாற்றமும் இருக்காது.ஆதாரங்களை சரளமாக எடுத்துவைத்து ஆணித்தரமாக அவர்கள் ஆற்றிய உரைகளில் பல இன்னும் என் மனதில் பதிவாகியுள்ளன.
முன்கூட்டியே தயார் செய்யாமல் ஒப்புக்கு உரையாற்றும் பழக்கம் அவர்களுக்கு எப்போதும் கிடையாது.

அவர்கள் சில வருடங்களாகவே உடல் நலம் குன்றி அதிகமான சிரமத்துக் குள்ளானார்கள்.குடும்பத்திலும் பல பிரச்சினைகள். அவற்றை அவர்கள் பொறுமையுடன் தாங்கிக் கொண்டு தன் கடமையைத் தொடர்ந்தார்கள். நான் வெளிநாட்டுக்கு வந்த பிறகு அவர்கள் உடல்நிலை காரணமாக பணியிலிருந்து ஓய்வு கொடுக்கப் பட்டார்கள் என்று கேள்விப் பட்டேன்.
இம்மையில் இனி எங்களுக்குள் சந்திப்பில்லை என்ற நினைப்பே மனதை நொறுங்க வைக்கிறது.
தயவு தாட்சண்யம் இன்றி மார்க்கத்தை சொல்லும் ஆலிம்கள் தான் இன்று நம் சமுதாயத்துக்குத் தேவை.

நம் அன்பு ஆலிம் அவர்கள் அந்த அளவில் தன்னிகரில்லாத ஒரு மனிதராக- ஆலிமாகத் திகழ்ந்தார்கள் என்பதை நான் நன்கு அறிவேன். நான் நிர்வாகப் பொறுப்பில் இருந்த போது என்னையறியாமல் ஏதேனும் கூட்டங்களில் பேசியிருந்தாலோ அல்லது என்னுடைய செயல் பாட்டில் ஏதேனும் திருத்தம் கண்டாலோ, அதை நேரில் வந்து சுட்டிக் காட்ட அவர்கள் தவறியதில்லை. ஊரில் மர்க்கத்துக்குப் புறம்பான எந்த நிகழ்வுகள் நடந்தாலும் அதை ஜும்மா உரையில் நளினமகச் சுட்டிக் காட்டி நம்மை நேர்வழிப் படுத்தவும் அவர்கள் தயங்கியதில்லை.
அதனால் அவர்கள் மீது சிலருக்கு அபிப்பிராய பேதங்கள் ஏற்பட்டதும் ரகசியமல்ல.
பள்ளிகள்-மதரஸாவின் தாளாளராக நான் பொறுப்பில் இருந்த போது, நம்மூர் மதரஸாவில் கல்வித்தரத்தை முன்னேற்ற மேற்கொண்ட முயற்சிகளுக்கு அவர்கள் ஓர் அர்ப்பணிப்பு உணர்வுடன் ஒத்துழைப்புத் தந்தார்கள்.

கண்ணியத்துக்குரிய அப்துல் ஹையி ஆலிம் பெருந்தகை அவர்கள் திடீர் மறைவுக்குப் பிறகு ஏற்பட்ட கல்வித் தொய்வை நீக்குவதற்கு முஸ்லிம் தர்ம பரிபாலன சபா மேற்கொண்ட முயற்சிகள் வெற்றிபெற அவர்கள் முக்கியக் காரனமாக இருந்தார்கள். நம்மூர் ஒரு நல்ல ஆலிமை இழந்துவிட்டது. நான் ஒரு நல்ல நண்பரை- மார்க்க ஆலோசகரை- என் குடும்பத்தில் ஒருவரை இழந்துவிட்ட தவிப்பில் இருக்கிறேன். மனம் கனக்கிறது.

அல்லாஹ் அவர்களது பிழைகள் அனைத்தையும் பொறுத்து, தன்னளவில் சங்கையுடன் உயர்த்திக் கொள்ளுமாறு பிரார்த்திக்க மட்டுமே இப்போது நம்மால் முடியும்.

அவர்களை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு அல்லாஹ்தான் தைரியத்தையும்- பொறுமையையும் கொடுக்கவேண்டும்.

தொலைபேசியில் அனுதாபம் சொன்னபோது அவர்கள் மகனார் இளவல் கௌது கதறி அழுத பாதிப்பு மாறாத நிலயில் அதிகாலை 1.45 மணிக்கு இந்தக் குறிப்பைப் பதிவுசெய்கிறேன்.
ஹிமானாசையித்,
சிங்கப்பூர் - 08 - 07 - 2005


 
  மன்சூரா பீவி மலேசியா

31-05-2005

 
 

என்னுடைய தாயார் மன்சூரா பீவி அவர்கள் 31-5-2005  அன்று  மறைந்து விட்டனர். அவர்களுக்காக இறைவனிடம் பிராத்திக்கவும்.

இப்படிக்கு மகள் : ஆயிஷா பானு


 
     
  செய்யதத்து நிஸா சித்தார்கோட்டை

09-05-2005

 
 

மர்ஹூம் முகம்மது இபுறாகிம் அவர்களின் மனைவி செய்யதத்து நிஸா (மர்ஹூம் P.S.அப்துல் ஜப்பார் அவர்களின் மகள்) 09-05-2005 சித்தார்கோட்டையில் வபாத்தாகி விட்டார்கள் --(இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்). (குறிப்பு: சின்ன பள்ளி அருகில் அவர்களது வீடு உள்ளது)


 
 

 

 
  பாத்திமாதீனா மலேசியா

29-04-2005

 
 

என் மாமு செய்ய்து முகமது அவர்களின் மனைவி கொய்யா வீட்டு பாத்திமாதீனா அவர்கள் மலேசியாவில் 29-04-2005 வபாத்தாகி விட்டார்கள் --(இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்) சீனி அகமது பக்சி - சவுதி அரேபியா


 
         
  ஜமீலா பீவி சித்தார்கோட்டை

19-04-2005

 
         
 

மர்ஹூம் அப்துல் ரஹீம் அவர்களின் மனைவி ஜமீலா பீவி அவர்கள் சித்தார்கோட்டையில் 20-04-2005 அன்று காலமானார்கள். (இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்) சித்தார்கோட்டையில் 19-04-2005  மாலை 5 30  மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.


 
  அமீருதீன் மலேசியா

08-04-2005

 
 

ஷேகாதி நசீர்கான் அவர்களின் அண்ணன் அமீருதீன் அவர்கள் மலேசியாவில் 08-04-2005 அன்று  காலமானார்கள். (இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்)


 
         
  T.அஹமது கான் சித்தார்கோட்டை

12-03-2005

 
 

மர்ஹூம் தையுப் கான் அவர்களின் மகன் அஹமது கான் அவர்கள் சித்தார்கோட்டையில் 12-03-2005 அன்று காலை 9 மணிக்கு காலமானார்கள். (இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்) சித்தார்கோட்டையில் 13-03-2005 மாலை 4 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

செய்தி அளித்தவர்: பாசில் கான் (சவுதி அரேபியா) 966033576326


 
         
  மெளலவி அப்துல் கப்பார் ஆலிம் பெரியபட்டிணம்

12-02-2005

 
 

முன்னால் இராமநாதபுர மாவட்ட ஜமாத்துல் உலமா தலைவரும், மாவட்ட ஷரீஅத் கவுன்சிலின் தொடர்புடையருமாகிய மெளலான மெளலவி அப்துல் கப்பார் ஆலிம் அவர்கள் 12-02-2005 அன்று இராமநாதபுரத்தில் காலாமானர்கள். அவர்களது சொந்த ஊரான பெரியபட்டடினத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.(இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்)

அவர்கள் பற்றிய குறிப்பை டாக்டர் ஹிமானா சையித் அவர்கள் மூலம் கேட்போம்!

இவர்கள் இராமாநதபுர மாவட்டத்தில் தலைசிறந்த ஆலிம்களில் ஒருவராவார்கள். இவர்கள் இராமாநாதபுரத்தில் உள்ள ஈசா பள்ளியிலும் அதன் பின் சித்தார்கோட்டையிலும் ஓய்வு பெறும் வரை பேஷ் இமாமாக பணிபுரிந்துள்ளார்கள்.

எப்பொழுதும் சமுதாய வளர்ச்சிப் பணிகளில் அவர்களின் பங்கு இருந்தது. இவ்வுலக கல்வியின் முக்கயத்துவத்தை ஆதரித்த ஆலிம்கள் சிலரில், இவர்களும் ஒருவராவார்கள். நான் படிக்கும் காலத்தில் (அறுபதுகளில்) படிக்கும் மாணவர்களுடன் இவர்கள் அதிக தொடர்பு வைத்திருந்தார்கள். அந்த மாணவர்களில் பலர் இன்று மிக உயர்ந்த நிலைகளில் உள்ளனர். அத்தகையோர்களில் சிலரைக் குறிப்பிட வேண்டுமெனில் ஹாஜி அபுல் ஹசன் I.A.S, தாலையூத்து டாக்டர் இஸ்மத்துல்லாஹ், டாக்டர் சிகாபுதீன் (சென்னை). ஏன் அவர்களது பேரனையும் வணிகவியலில் முதுநிலைக்கல்வி பெற ஊக்கம் காட்டினார்கள்.

பெரியபட்டிணத்தில் பள்ளிவாசல் கட்ட மிக அதிக அக்கறை எடுத்து மிக நேர்த்தியான முறையில் கட்டச் செய்தார்கள்.

அவர்களுடன் எனக்கு மிக நெருக்கமான நட்பு உண்டு. இறுதியாக நான் ஐந்து மாதங்களுக்கு முன்பு இராமநாதபுரத்தில் நடந்த ஒரு திருமண விழாவில் சந்தித்தேன். ஆன்மிக விசயங்கள் பல பேசினோம். அவைகள் இன்னும் என் மனதில் உள்ளன.

ஓய்வுக்குப் பிறகு அவர்கள் சொந்த ஊரான பெரியபட்டிணத்தில் மிக குறைவான ஈடுபாடு கொண்டிருந்தார்கள். எனினும் சுற்றுவட்டாரத்தில் நடக்கும் விழாக்களில் அழைக்கப்பட்டால், தனது வயதையும் பார்க்காமல் அதில் கலந்து கொள்வார்கள்.

அல்லாஹ் அவர்களது தவறுகளை மண்ணித்து மிக உயர்ந்த அந்தஸ்தை கொடுப்பானாக! அவர்களது கப்ரை விஸ்தீரணமாகவும் ஒளிமையமாகவும் ஆக்கயருள்வானாக!

டாக்டர் ஹிமானா சையித்


 
     
  சுலைஹா பீவி தைப்பீங் - மலேசியா

04-01-2005

 
     
 

மர்ஹூம் ஹாஜி ஹபீபுல்லாஹ் அவர்களின் மனைவி சுலைஹா பீவி அவர்கள் தைப்பீங்கில் காலமானார்கள். (இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்).

 
     
  பௌசியா பானு  வாழூர் - சித்தார்கோட்டை

04-01-2005

 
     
 

ஜனாப் ஹசன் குத்தூஸ் அவர்களின் மனைவி பௌசியா பானு அவர்கள் வாழூரில் 04-01-05 இரவு காலமானார்கள். 05-01-2005 மாலை சித்தார்கோட்டையில் நல்லடக்கம் செய்யப்படும். (இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்)..

ஹசன் குத்தூஸ் (கணவர்) மற்றும் பிள்ளைகள்: 914567261569


 
 
  ஹாஜி தாஜுதீன் சித்தார்கோட்டை

19-11-2004

 
 
   

மர்ஹூம் கட்டையார் மைதீன் அவர்களின் மகன் ஹாஜி தாஜுதீன்  அவர்கள் சித்தார்கோட்டையில் 19-11-2004 அன்று காலமானார்கள். சித்தார்கோட்டையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. (இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்)..


 
   
  ஹாஜி S.M.J. அமானுல்லா கான் சித்தார்கோட்டை

22-10-2004

 
 
   

ஹாஜி S.M.J. அமானுல்லா கான் அவர்கள் 22-10-2004 அன்று இரவு காலமானார்கள். (இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்).. 23-10-2004 காலை 11 மணிக்கு பணிக்கர் ஊரணி கபர்ஸ்தானில் நல்லடக்கம் செய்யப்பட்டது.


 
     
     

நமதூர் தொடர்புடையவர்களின் மறைவுச் செய்தியை இந்தப் பக்கத்தில் இலவசமாக வெளியிட, எங்களுக்கு எழுதவும்.  (இந்த வரிகளை கிளிக் செய்யவும்)