Bukhari Search
(Tamil/English) புகாரி

 

குர்ஆனில் தேடல் (அரபியுடன்)

 

இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள்

 
குர்ஆன் அறிவியல் சிந்தனை New
 
ஹிமானா சையத் பக்கம்
 
அறிவியல் அதிசயம் MJM Iqbal
 
முதுவை ஹிதாயத் பக்கம்
காயா பழமா? (மருத்துவக் குணங்கள்)
 

கட்டுரைகள்

 
சித்தார்கோட்டை பற்றி
 
Details about Chittarkottai'ans
 
சித்தார்கோட்டை போன் நம்பர்கள்  21st June 2006 Record
 
தொழுகை நேர அட்டவணை
 

Islamic Directory

Contact us

eGreetings

GuestBook

மரண அறிவிப்பு: புதுவலசை முன்னாள் கிராம அதிகாரியும், முன்னாள் ஜமாஅத் தலைவருமான ஜனாப் குத்புதீன் அவர்கள் 10 -05- 2008 அன்று காலமானார்கள்.

முழு விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்

HSC 2008 Results

நமது பள்ளி மாணவர்கள் வழக்கம் போல இந்த வருடமும் சிறப்பாக எழுதி 94.5 சதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

M.மர்ஜுகா ரைஹானத்துல் ஹஸீனா 1041  மார்க் எடுத்து முதல் மாணவியாக வந்துள்ளார்
முழு விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்

நர்கிஸ் - மல்லாரிப் பதிப்பகம்  இணைந்து நடத்தும்  "முகம்மது இஸ்மாயில் -இபுறாஹீம் பீவி நினைவு"

நாவல் - கட்டுரைப் போட்டிகள் (இஸ்லாமிய வெளிச்சத்தில் மனித நேயம்)

முதல் பரிசு: ரூபாய 5000/-
இரண்டாம் பரிசு: ரூபாய 3000/-
மூன்றாம் பரிசு: ரூபாய 2000/-
5 ஆறுதல் பரிசுகள் :

ரூபாய 1000/

முழுமைக்கு இங்கே கிளிக் செய்யவும்

தியாகத்திற்கு இவ்வுலகிலேயே இறைவனது பரிசைக்கண்டு மகிழ்ந்த பெண்மணி!:(Audio - Play & Download)
அன்று: -ஏக இறைவனை ஏற்றுக் கொண்ட ஒரே காரணத்துக்காக தன் கண் முன்னால் ஒன்றன் பின் ஒன்றாக தன்னுடைய நான்கு குழந்தைகளையும் கொதிக்கும் எண்ணெய் கொப்பரையில் போட்டு வறுத்தெடுத்த கொடுமையைக் கண்ட பிறகும் ஏக இறைக்கொள்கையை விடாத தியாகச் செம்மல்!

ஏக இறைக் கொள்கையை ஏற்றுக்கொண்டதற்காக சவுக்கால் அடிக்கப்பட்டு சதைகள் பிய்தெடுக்கப்பட்ட கொடுமையிலும் உறுதி மங்கா அன்னை அசியா! அவரின் பிராத்தணை ஏற்கப்பட்டு சுவர்க்கத்தின் மாளிகையைக் கண்டு புன்முறுவல் பூத்தவர்களாக கொடுமையைத் தாங்குகிறார்கள்.

உரை: அபூ அரீஜ்

இன்று: -(சமீபத்தில் சவூதி அரேபியாவில் நடந்த உண்மைச் சம்பவம்)
இந்த இரண்டு சரித்திர உரையைக்் கேட்ட இஸ்லாமிய நெறி தவறி வாழ்ந்த ஒரு பெண் கதறியழுதவராக முகம் கருத்தவராக துடிதுடிக்கிறார். அருகிலிருந்தவர்கள் ஷஹாதா கலிமா மூன்று முறை சொல்லிக் கொடுக்க அதைச் சொல்ல அவரால் இயலவில்லை! மாறாக, "அல்லாஹ் மீது சத்தியமாக நரகத்தில் எனது இடத்தைப் பார்க்கிறேன்" எனக் கூறியவராக மூச்சைவிடுகிறார்.

 வீடியோ இணைப்பிற்கு இங்கே கிளிக் செய்யவும் (http://suvanathendral.com)

இஸ்லாத்தின் பார்வையில் மாதவிடாய் (Audio - Play & Download)

மாதவிடாய் பற்றிய அவசியமான குறிப்புகள் மற்றும் ஒழுங்கற்ற மாதவிடாய் உடைய பெண்களின் வணக்க வழிபாடுகளின் முறைகள் குர்ஆன் - ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில்  விளக்கப்படுகிறது.

ஆடியோ / வீடியோ இணைப்பிற்கு இங்கே கிளிக் செய்யவும்

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு உதவித் தொகை

மஸ்கட் வாழ் தமிழ் முஸ்லிம்கள் சார்பாக ஆண்டுதோறும் தமிழகத்திலுள்ள வசதி குறைந்த மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவி செய்து வருகிறார்கள். 

உயர்நிலை பள்ளிப் படிப்பு முடிந்து மேல்நிலை பள்ளிப் படிப்பு (+2), பட்டயப் படிப்பு, பட்டப் படிப்பு, தொழில் கல்வி, மார்க்கக் கல்வி பயில பொருளாதார வசதி குறைந்த முஸ்லிம் மாணவ மாணவியர் தங்கள் விண்ணப்பங்களைக் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பித் தருமாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றார்கள்.

List of Organisations offering Scholarships, Awards and Coaching for Minorities are listed. Needy students may apply to avail the facilities.
 For More Details Click here

விஞ்ஞான சகாப்தத்தில் உங்கள் சிந்தனைக்கோர் ஒப்பற்ற விருந்து(கற்ப அறையில் சிசுவின் படித்தர வளர்ச்சி)

பொதுவாக மனித உடலுக்கென சில தனித் தன்மைகள் உள்ளன. தனக்குள் அன்னியப் பொருள் எதனையும் அது ஏற்றுக் கொள்ளாது என்பது அவற்றுள் ஒன்றாகும். இதற்கு உதாரணமாக கண்களைக் குறிப்பிடலாம். கண்களில் ஏதேனும் தூசுகள் விழுந்து விட்டால் அதை எப்படியாவது வெளியேற்றவே முயற்சிக்கும். இது போலவே பெண்களின் கருவறைகளும் அமைந்துள்ளன. ஆயினும் கருவறை அன்னிய உயிரைத் தனக்குள் ஏற்றுக் கொள்கிறது. பல மாதங்கள் வளர்ந்து திடீரென அதை வெளியேற்ற முயற்சிக்கிறது. இவ்வாறு முயற்சிக்கும் போது கருவறை சுருங்கி விரிகின்றது. இதன் காரணமாகவே பிரசவ வேதனை ஏற்படுகிறது. இதனைத்தான் இவ்வசனம் கூறுகிறது. 'ஓவ்வொரு பொருளும் குறிப்பிட்ட கால நிர்ணயப்படியே அவனிடத்தில் உள்ளன' என்ற சொற்றொடர் முக்கியமாகக் கவணிக்கப்பட வேண்டியதாகும். இயற்கைக்கு மாறாக அன்னியப் பொருளை ஏற்றுக் கொண்டிருந்த கருவறை ஒரு குறிப்பிட்ட நேரம் வந்ததும் வெளியேற்றுவதற்கு இன்றுவரை காரணம் கண்டுபிடிக்கப்படவில்லை. அன்னியப் பொருளை கருவறை பல மாதங்களாக ஏற்றுக் கொண்டது எப்படி? என்ற கேள்விக்கும் இதுவரை விடையில்லை. இயற்கைக்கு மாறாக இறைவன் தனது வல்லமையினால் ஒரு காலக் கெடுவை நிர்ணயிக்கிறான். அந்த நிர்ணயத்தின்படியே நீண்ட காலம் அன்னியப் பொருளை கருவறை சுமந்து கொண்டிருக்கிறது. என இச்சொற்றொடர் விளக்குகின்றது.   முழுமைக்கு இங்கே கிளிக் செய்யவும்

ஆபரேஷன் செய்யும் ரோபட்டுகள் -(அறிவியல் அதிசயம்)

ரோபட் மூலம் அறுவை சிகிச்சை என்பது ஒரு செயல்முறை ஆகும். ஒரு கம்ப்யூட்டரில் ஏற்கனவே செலுத்தப்பட்ட, பதிவு செய்யப்பட்ட புரோகிராம் மூலம் திட்டமிட்டு செய்யப்படும் பணியே ரோபட் அறுவை சிகிச்சை ஆகும்.

இன்னும் சொல்லப் போனால் மருத்துவ நிபுணர்கள், ஒரு ஆபரேஷனுக்கு முன்கூட்டியே திட்டமிட்டு வழிமுறைகளைக் கையாண்டு சிறப்பாக, வெற்றிகரமாக நடத்தி முடிக்கின்றார்களோ அது போன்றே மருத்துவ நிபுணர்களுக்கு உதவியாக அல்லது மருத்துவ நிபுணர்களுக்கு பதிலாக ரோபட்டுகள் பணிபுரிகின்றன.

ரோபட்டுகளின் தன்னியக்க திறன்கள் மூலம் பெறப்படும் பயன்கள் ஏராளம். குறிப்பிட்ட புரோகிராம்கள் மூலம் ரோபட்டுகளின் இயக்கங்களை மிகத் துல்லியமாகவும் அதே சமயத்தில் மிகவும் திறமையாகவும் செயல்பட வைப்பது இதன் சிறப்பம்சமாகும். ரோபட்டுகள் தங்கள் பணியில் மிகுந்த கவனமும், சரியான திசை வேகமும், முடுக்கு வேகமும், மிகத் துல்லியமாகவும் செயல்படுகின்றன. ஒரு சிறு மயிரிழை அளவு கூட தவறுகள் நிகழா வண்ணம் திறம்பட கையாளுகின்றன.

ரோபட்டுகளின் தன்னியக்க திறன்களால் மீள் நிகழ்வு பணி மற்றும் நம்பகத்தன்மை மூலம் எண்ணற்ற பயன்கள் ஏற்படுகின்றன.

கால நேரத்தை கணக்கிடும் போது ரோபட்டுகள் முன்னணி வகிக்கின்றன. பல கட்டங்களை உள்ளடக்கிய அறுவை சிகிச்சையின் போது, ஒரு கட்டத்தை முடித்த பிறகு அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கு மனித மருத்துவ நிபுணர்கள் போல யோசிக்காமல் அல்லது தயங்காமல் மடமட என்று பணிகளை முடித்து விடுகின்றன.

  முழுமைக்கு இங்கே கிளிக் செய்யவும்

முதுவை ஹிதாயத் பக்கம்

முழுமைக்கு இங்கே கிளிக் செய்யவும்

மீலாது விழாக்களும் மெளலிது ஷரீபுகளும்

தன் பெற்றோர், பிள்ளை மற்றும் எல்லா மனிதர்களை விடவும் நான் நேசமுள்ளவராக ஆகும் வரை உங்களில் எவரும் உண்மையான முஃமினாக முடியாது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி

என் உயிர் எவன் கைவசம் இருக்கின்றதோ அவன் மீது ஆணையாக தன் பெற்றோர் இன்னும் பிள்ளைகளைவிடவும் நான் நேசமுள்ளவராக ஆகும் வரை உங்களில் எவரும் உண்மையான முஃமினாக முடியாது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி

(ஒருநாள்) நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது நபி(ஸல்) அவர்கள் உமர்(ரலி) அவர்களின் கையை பிடித்துக் கொண்டிருந்தார்கள். அல்லாஹ்வின் தூதரே! என்னைத் தவிர மற்ற எல்லா உயிரினங்களையும் விட உங்களை நான் மிகவும் நேசிக்கின்றேன் என உமர்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் என் உயிர் எவன் கைவசம் இருக்கின்றதோ அவன் மீது ஆணையாக உன்னை விட நான் மிக நேசமுள்ளவராக ஆகும் வரை நீர் உண்மையான முஃமினாக முடியாது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அதற்கு உமர்(ரலி) அவர்கள் அல்லாஹ்வின் மீது ஆணையாக இப்போது நீங்கள் என் உயிரை விடவும் என்னிடத்தில் மிக நேசமானவர்கள் எனக் கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் இப்போதுதான் நீங்கள் உண்மையான முஃமீன் எனக்கூறினார்கள். ஆதாரம்: புகாரி

இவ்வாறு ஒவ்வொரு முஸ்லிமும் நபி(ஸல்) அவர்களை உண்மையான முறையில் நேசிப்பது வாஜிபாகும் (கட்டாயமாகும்). முழுமைக்கு இங்கே கிளிக் செய்யவும்

சூபித்துவத் தரீக்காக்கள்.-அன்றும் இன்றும் (மூன்றாவது அடிப்படை . இல்மு திக்ரு

பலவீனமான, புனையப்பட்ட ஹதீஸில் உருவான இல்மு திக்ர் போதனை ...
ஸஹீஹ் என்றால் ஆதாரப்பூர்வமான ஹதீஸாகும். நபியவர்களிடமிருந்து தாம் பெற்றதாக நேர்மையான, நினைவாற்றல் மிக்கஅறிவிப்பாளர்கள் எவ்வித குளறுபடிகளோ,மாற்றமோ இன்றி அறிவிக்கும் ஹதீஸ்களே ஆதாரப்பூர்வமாக ஹதீஸ் எனக் கொள்ளப்படும் .

இதற்கு மாற்றமான ஹதீஸ்கள் பலவீனமான ஹதீஸ்களாகும். பலவீனமான ஹதீஸ்களை ஆதாரத்துக்கு எடுக்க முடியாது என்பதே ஹதீஸ்க்கலை அறிஞர்களின் ஏகோபித்த முடிவாகும். ஆனால் தப்லீக் பெரியார்களைப் பொறுத்த வரைக்கும் இது விடயத்தில் எவ்விதக் கவனமும் இல்லாது அலட்சியமாக நடந்து கொள்வதே அவர்களின் வழக்கமாகும் .

இவர்கள் போற்றிப் புகழும் ஸூபித்துவப் பித்தர்களில் ஒருவனான இப்னு அறபி என்பவன் ஹதீஸ் பற்றி என்ன கூறுகின்றான் பாருங்கள் ...
'எத்தனையோ ஹதீஸ்களை துன்யாவுடைய உலமாக்கள் ஸஹீஹ் என்று நினைத்து அமல் செய்து கொண்டிருக்கின்றார்கள் ஆனால் நாங்கள் கஸ்புடைய ஞான நிலையில் நபிகளை நேரடியாகச் சந்தித்து இந்த ஹதீஸை நீங்கள் சொன்னீர்களா உங்களுடையதுதானா ? என வினவும்போது இல்லையே ! என்று மறுத்து விடுவார்கள் . எனவே நேரடியாக நபியிடமிருந்து கிடைத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் நாங்கள் அந்த ஹதீஸின்படி அமல் செய்வதை விட்டு விடுகின்றோம் . அவ்வாறே பலவீனமான ஹதீஸை துன்யாவுடைய உலமாக்கள் புறக்கணிக்கின்றார்கள் .ஆனால் நாங்கள் நபியிடத்தில் நேரடியாக சந்தித்து இது பற்றிக் கேட்ட வேளை இல்லையே நான் தானே அதைச் சொன்னேன் என்பார்கள் . எனவேதான் துன்யாவுடைய குறுகிய அறிவுள்ள இந்த ஹதீஸ்கலை உலமாக்களின் 'இந்த ஹதீஸ் பலவீனமானது .அது இட்டுக்கட்டப்பட்டது' எனும் பேச்சையெல்லாம் நாம் பொருட்படுத்துவதில்லை என்று உளறுகின்றான் .்.
 முழுமைக்கு இங்கே கிளிக் செய்யவும்

அல்லாஹ் போதுமானவன்! (ஹிமானாவின் சிறுகதை)

"ஆமினா.. ஆமினாம்மா" என்றழைத்தார் ஜக்கரியா.

என்னத்தா?  இங்கேதானே இருக்கேன்" என்றாள் அழுது அழுது சோர்ந்து போயிருந்த ஆமினா.

"சீக்கிரமா கொஞ்சம் வெந்நீர் போடும்மா. குளிச்சிட்டு ஒரு ரவுண்ட் போயிட்டு வந்துடறேன்" என்றார்.

ஆமினா பதறினாள். "இந்த நெலமயில நீங்க வெளியில போக முடியாது அத்தா! சும்மா படுத்துக்கெடங்க.."

"ஸஹருக்கு ஆக்குன சோறு அப்படியே இருக்கு மறு உலைப்பாச்சி கஞ்சியாக்கித் தாரேன்" என்றாள்.

ஜக்கரியா மறுத்து விட்டு எழ முயன்றார். மடாரென்று சரிந்தார்.

"அத்தா!" என்ற பிள்ளைகளின் கதறலில் தெருவே கூடி விட்டது.

வேறு வழியில்லை! இந்த 27ஆம் கிழமை வருமானம் ஒன்றுமில்லாமல் போய்விட்டது! தன்னுடைய ஆசையில் - திட்டத்தில் விழுந்த பேரிடியின் வலியைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தினறினார் ஜக்கரியா.

பிள்ளைகள் அருகிலிருந்து மெளனமாய் அழுது கொண்டிருந்தார்கள்.

 முழுமைக்கு இங்கே கிளிக் செய்யவும்

முச்சந்தியில் முஷாரப்!. .. -ஹிமானா - தலையங்கம்

அமெரிக்காவின் தூண்டுதலில் பாகிஸ்தானில் ஜனநாயகத்தை நிலை நிறுத்தும் நோக்கத்துடன் முஷாரபுடன் ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டு தன் தாய்நாட்டுக்குத் திரும்பிய திருமதி பெனாஸிர் புட்டோ படுகொலை செய்யப் பட்டிருக்கிறார்.

• தாயகம் திரும்பிய அவர் தனது முஷாரப் ஆதரவு நிலையில் சில மாற்றங்களை பகிரங்கமாக அறிவித்ததையும், தனக்குப் போதிய பாதுகாப்பை அவர் தரவில்லை என்றும், தனக்கு எதேனும் நிகழ்ந்தால் அதற்கு முஷாரபே பொறுப்பு என்றும் அவர் தான் இறப்பதற்கு இரு நாட்களுக்கு முன்னர் அமெரிக்காவுக்கு அனுப்பிய ஈமெயிலில் குறிப்பிட்டிருப்பதும் முஷாரபைக் குற்றவாளியாகக் காட்டுகின்றன!

• முஷாரப் பதவியிலிருந்து விலக சாமான்யமாக ஒப்புக் கொள்ளவில்லை. அதிலும் ராணுவத்தலைமைப் பொறுப்பை விட்டுக் கொடுக்க அவர் சுலபமாக சம்மதிக்கவில்லை. இருந்தாலும் அமெரிக்காவின் நெருக்குதலுக்குப் பணிந்தாக வேண்டிய கட்டாயம்! தேர்தல் மூலம் ஜனாதிபதியாகிக் கொண்டு பொதுத் தேர்தலை அறிவித்தார். பெனாஸிரின் கொலையைத் தொடர்ந்து இன்னொரு முன்னாள் பிரதமர் ஷாநவாஸ் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்திருப்பதால் பாகிஸ்தானில் மீண்டும் ஜனநாயகம் மலர்வதற்கு மேற்கண்ட முயற்சி பெனாஸிரின் கோரக்கொலையால் விபத்துக்குள்ளாகி பரிதாபமாக நிற்கிறது! இதற்குக் காரணமாக முஷாரபையே உலகம் குற்றம் சாட்டும்!

• பெனாஸிரின் கொலையால் பாகிஸ்தானில் மூண்டிருக்கிற கலவரங்கள் எற்கனவே பல உயிர்களைக் காவு கொண்டுள்ளன. இதன் தீவிரம் இன்னும் பரவலாகவும் பயங்கரமாகவும் அதிகரிக்க வாய்ப்புள்ள பொதுச்சூழலே அங்கு நிலவுவதால், அதற்கான பழியும் முஷாரபின் மீதுதான் விழும்!
.முழுமைக்கு இங்கே கிளிக் செய்யவும்

வாக்குமூலம்

'நான்' என்பது உலகமாயிருந்தது!
பால் எது? சுண்ணாம்பு எது?
விளங்காத போது
'நான்' என்பது உலகமாயிருந்தது.

சூழ்ந்து கடிக்க வந்தன
சுயநலங்கள்.
ஒதுங்கி ஒடுங்கியதில்
'நான்' என்பது தானாய் ச்சிறுத்தது.

இப்போதும்...
இருட்டும் போதெல்லாம்
வழிகளின் பயத்திலோ
வலிகளின் உணர்விலோ
உறவை, நட்பை உள் வாங்கி
'நான்' சற்றே விரிவதுண்டு.

முழுமைக்கு இங்கே கிளிக் செய்யவும்

இஸ்லாம் கூறும் சமூக ஒற்றுமை!

அன்று உயர் குலத்தைச் சார்ந்த அபூபக்கர், உமர், உஸ்மான் (ரலி) ஹப்பாப் (ரலி) போன்றோருக்கு - தன் நாட்டை, வீட்டை, மனைவி, மக்களைத் துறந்து சென்ற முஹாஜிர்களுக்கு - அனைத்திலும் சரி பாதி தருகிறோம் என்று சொன்ன அன்ஸாரிகள் அனைவரும் மனித நேயத்தின் ஊற்றுகள்.

இப்படிப்பட்ட உயர்ந்து பரந்த தியாக மனப்பான்மை அந்த அறியாமைக்காலத்து மக்களிடம் வரக் காரணம் இஸ்லாம். இஸ்லாம் என்றால் கட்டுப்படுதல். தன்னுள் புகும் ஒவ்வொரு மனிதனையும் கட்டுப்பாட்டுக்குள் நுழைத்துக் காத்து வந்தது இஸ்லாம். கட்டுப்பாடு என்றால் சிறையில் அடைத்து, சித்திரவதை செய்யும் கட்டுப்பாடன்று. மாறாக, சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கச் செய்யும் கட்டுப்பாடு. வார்த்தை

பேசுதல் முதல் வழக்காடுவது வரை, உண்ணுதல் முதல் உறங்குதல் வரை கற்றுத் தந்து மனிதப் பிறவியைக் கண்ணியப்படுத்துகிறது இஸ்லாம்.
முழுமைக்கு இங்கே கிளிக் செய்யவும்

சர்க்கரை நோயை கோவக்காய் கட்டுப்படுத்துகிறது

பெங்களூரைச் சேர்ந்த பொது மக்கள் சுகாதாரம் மற்றும் மருத்துவ ஆய்வுக் குழு மருத்துவர்கள் கோவக்காயை பொடியாக்கி சாப்பிடும் முன் சர்க்கரை அளவு 200-க்கும் குறைவாக உள்ள 30 புதிய சர்க்கரை நோயாளிகளுக்கு தினமும் ஒரு கிராம் கொடுத்து வந்தனர். அந்த ஒரு கிராம் பொடி, கோவக்காய் பச்சையாக 15 கிராம் சாப்பிடுவதற்கு சமம். இவ்வாறு 3 மாதம் நோயாளிகள் சாப்பிட்டனர். அதன் பிறகு அவர்களுக்கு ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைப் பரிசோதித்ததில் சர்க்கரையின் அளவு மிகவும் குறைந்து இருந்ததைக் கண்டுபிடித்தனர். தினமும் 50 கிராம் சமைத்த கோவக்காய் சாப்பிட்டால் சர்க்கரை நோய் குறையும் என்று அந்த ஆய்வுக் குழு தெரிவித்துள்ளது.
முழுமைக்கு இங்கே கிளிக் செய்யவும்

குழந்தைகளும் தொலைக்காட்சியும்

குழந்தையிடம் தொலைக்காட்சியின் ஆதிக்கம் மற்றும் விபரீதம் பற்றிய ஒரு ஆய்வு புகழ்பெற்ற மிச்சிங்காம் பல்கலைகழகத்தில் மேற்கொள்ளப்பட்டது. மிகவும் அதிர்ச்சிகரமான தகவல்களை அது வெளியிட்டுள்ளது. 
 
1. சாதாரணக் குழந்தை பள்ளியில் செலவழிக்கும் நேரத்தைக் காட்டிலும் தொலைக்காட்சியில் அதிக நேரம் செலவழிக்கிறது.
2. சராசரியாக ஒருவாரத்திற்கு 20 மணிநேரம் தொலைகாட்சியில் செலவழிக்கிறது. இது மற்ற எல்லா செயல்களைக் காட்டிலும் அதிகமாகும். ( தூங்குவதைத்தவிர ).
3. சராசரியாக 70 வயது நிரம்பிய மனிதன் 7 முதல் 10 ஆண்டுகள் வரை நேரத்தை தொலைக்காட்சியில் செலவு செய்கிறான்.
4. விளம்பரங்கள் குழந்தைகளை இலக்காக வைத்து தயாரிக்கப்படுகின்றன.
மாதந்தோறும் ஆயிரக்கணக்கான வியாபார விளம்பரங்கள் தயார் செய்யப்படுகின்றன.
5. ஒருவருடத்திற்கு 1000 முதல் 2000 வரையிலான போதை சம்பந்தப்பட்ட விளம்பரங்களை குழந்தைகள் பார்க்கின்றன. 
முழுமைக்கு இங்கே கிளிக் செய்யவும்

 
அரைமணி நேரத்தில் சிஸேரியன் ...ஓப்பன் ஈத்தரில் மயக்கமருந்து! (ஊற்றுக்கண்)

மயக்க மருந்து கொடுக்க 'பாயில் அப்பரட்டஸ்' அப்போது இராமநாதபுரத்தை எட்டியிருக்கவில்லை. ஈத்தர் என்ற மருந்தைத்தான் உபயோகித்தாக வேண்டும். ஒரு 'காஸ்துணி' பேடை நோயாளியின் முகத்தில் போர்த்தி கொஞ்சம் கொஞ்சமாக ஈத்தரை ஊற்ற வேண்டும். சில நிமிடங்களுக்கொருமுறை நோயாளியின் மூச்சு - நாடித்துடிப்பு -இதய இயக்கம் போன்றவற்றைத் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டு நான் மயக்க மருந்து கொடுக்க , டாக்டர் அப்துல்லாஹ் சுறுசுறுப்பாக இயங்கி அரை மணிநேரத்தில் அறுவை சிக்கிச்சை செய்து குழந்தையை வெளியில் எடுத்தார்.
குழந்தை உடனே அழவில்லை. பிரசவப் பாதையின் கடைசிப் பகுதியில் மாட்டிக்கொண்டு அதிக நேரம் இருந்ததால் குழந்தை உடனே சுவாசத்தைத் தொடங்கவில்லை. முழுமைக்கு இங்கே கிளிக் செய்யவும்
தபால் வழி இஸ்லாமியப் படிப்பு
( ஜாமியா மில்லியா கமாலியா - இஸ்லாமிய அஞ்சல் வழிக் கல்வி நிறுவனம்)

இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே ஓய்வு நேரத்தில் தபால் மூலம் மார்க்க கல்வி + உலகக் கல்வி இணைந்த வாழ்க்கை கல்வியை கற்ற அவரவர் பகுதியில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெறலாம் - வெளிநாடு உட்பட. 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், வயது வந்த திருமணமான பெண்கள், தமிழ் எழுத, வாசிக்கத் தெரிந்த அனைவரும், உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும் படிக்கலாம்.
முழுமைக்கு இங்கே கிளிக் செய்யவும்
திருக்குறள் _ அங்கில மொழியாக்கத்துடன்
  • வார்த்தை அல்லது அதிகாரம் மூலம் தேடும் வசதி
  • ஆங்கில மொழியாக்கம்
முழுமைக்கு இங்கே கிளிக் செய்யவும்

Add your site to our links - Visitors' Sites

Visitors:  

Colleges in TN

 

Quran Search
Arabic-English-Urdu-Tamil

 

Distance Finder

 

Ramnad District

 
Currency Converter
 
Indian Ministry (Updated) 10 June 07
 
TN Ministry Details
 
TN Dist in Glance
 
States Capitals / CMs / Governors.(Updated) 11 June 07
 
Indian MPs & TamilNadu MLAs List
 

Refer to Your Friends

 
STD Code (modified)
PIN Code

Chittarkottai NewsLetter

email :
subscribeunsubscribe

Hijiri / Gregorian Calander

Last Updted: 13-05-08

Google Web   Chittarkottai.com

Copyright © 2001 - Chittarkottai.com. All Rights Reserved.