அறிவியல் அதிசயம் - MJM Iqbal

29-04-2006

எங்கே நிம்மதி...

அவசரம் நிறைந்த உலகம் இது. ஆண்களும் பெண்களும் கடிகாரத்துடன் போட்டி போட்டுக் கொண்டு பணம் சம்பாதிப்பதற்காக ஓடிக் கொண்டு இருக்கிறார்கள்.

சவால்களும் போட்டிகளும் நிறைந்ததாக மனித வாழ்க்கை மாறிவிட்டது. குழந்தைப்பருவத்தில் இருந்தே நெருக்கடியான நிலையில் வாழும் நிலையில் இன்றைய மனித சமுதாயம் உள்ளது.

நகரங்களில் வளரும் குழந்தைகளும் இதற்கு விதிவிலக்கல்ல. அவர்கள் உலகம் எல்லாமே நான்கு சுவற்றுக்குள் தான் என்றாகி விட்டது. வீட்டில் இருந்து பள்ளி அல்லது கல்லூரி, அங்கு படிப்பு முடிந்ததும் மீண்டும் வீடு. வந்த உடனே மீண்டும் படிப்பு என்று அவர்களின் உலகமே மாறிவிட்டது. (இதில் விதிவிலக்காக சிலர் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று வாழ்க்கையை ஜாலியாக அனுபவிப்பவர்களும் உண்டு).

நன்றாக படித்தால் தான் அதிக மதிப்பெண்கள் பெற முடியும். அதிக மதிப்பெண்கள் இருந்தால் தான் கேம்பஸ் இண்டர்வியூ மூலம் நல்ல சம்பளத்தில் வேலைக்கு போக முடியும், என்ற நெருக்கடியில் இன்றைய மாணவ-மாணவிகள் உள்ளனர்.

கஷ்டப்பட்டு படித்து வேலைக்கு சென்றால் அதன் பிறகாவது நெருக்கடி குறைந்ததா? என்றால் அது தான் இல்லை. நெருக்கடிகள் மேலும் அதிகரித்துக் கொண்டே போகிறது.

வேலைக்கு சேர்ந்த இடத்தில் திறமையை வெளிப்படுத்த கூடுதல் நேரம் வேலை பார்க்க வேண்டிய நிலை. வேலை பார்க்கும் நிறுவனத்துக்கு கூடுதல் லாபம் சம்பாதித்து கொடுத்தால் தான் சம்பள உயர்வு மற்றும் பிற சலுகைகள் கிடைக்கும் என்ற நிலை காரணமாக கடுமையாக உழைக்கும் நிலைக்கு இன்றைய இளைய சமுதாயம் தள்ளப்படுகிறது.

ஒரு வழியாக வேலையில் திறமையை நிரூபித்து பதவி உயர்வும் சம்பள உயர்வும் பெற்றால் அதோடு வாழ்க்கையில் நிறைவு கிடைத்துவிடுவதில்லை. இருப்பதை விட இன்னும் உயர்ந்த இடத்தை தேடி மனம் அலைபாய... மீண்டும் ஒரு போராட்டம் தொடங்குகிறது. இதற்கிடையில் திருமணம், குழந்தை, குடும்பம் என்று வாழ்க்கையில் பரபரப்புகள் அதிகரித்துக்கொண்டே தான் இருக்கின்றது.

இது போன்ற பிரச்சினைகள் காரணமாக மன இறுக்கம் அதிகமாகி அதுவே பின்னர் உடலுக்கும் உயிருக்கும் உலை வைக்கும் எமனாக மாறிவிடுகிறது. பிரச்சினைகளின் தீவிரம் அதிகரிக்கும் போதும் எதிர்பார்த்தது போல வாழக்கை அமையாத போதிலும் மன இறுக்கம் வந்து விடும். இது போன்ற நிலையில் நாம் மிகவும் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். அப்போது தான் பெரிய அளவில் பாதிப்புகள் எதுவும் வராமல் நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும்.



இது போன்ற நிலையில் சிலர் டாக்டர்களை தேடுவதுண்டு. மருத்துவர் கொடுக்கும் மருந்துகள் மூலம் சிலருக்கு குணம் கிடைக்கும். மேலும் இது போன்ற நிலையில் சிலருக்கு நீண்ட காலம் மாத்திரைகள் சாப்பிட வேண்டிய நிலை உருவாகும். ஐயோ நாம் நோயாளியாகி விட்டோமே என்ற உறுத்தலும் சிலருக்கு இதனால் ஏற்படும். இதுவே அவர்களது மனநிலையை மேலும் பாதித்து விடும்.

இதில் இருந்து தப்பிக்க சிலர் யோகா மற்றும் பிற மாற்று மருத்துவ முறைகளை நாடுவது உண்டு. அவற்றை தொடர்ந்து பயன்படுத்த முடியாத நிலை சிலருக்கு ஏற்படும். எனவே அதுவும் பயன் தராமல் போகும் நிலை உருவாகும்.

சரி இதற்கு தீர்வு தான் என்ன? நீங்கள் என்னதான் செய்யப் போகிறீர்கள்? எங்கு செல்லப் போகிறீர்கள்? டாக்டரிடமா? யோகாவா? அல்லது விடுமுறை எடுத்துக் கொண்டு ஒய்வு எடுக்கப் போகின்றீர்களா?

தேவையில்லை. அதற்கெல்லாம் வழி பிறந்துவிட்டது. இன்றைய `பிஸி` உலகில் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பது மனச்சோர்வு மற்றும் மன அழுத்தம்.

இதற்கெல்லாம் காரணம் என்ன? அவசர உலகில் எல்லாவற்றையுமே அவசரமாக முடிக்க வேண்டிய கட்டாயம். ஏதாவது ஒன்றில் தடங்கல் ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட நபருக்கு எல்லா தரப்பிலிருந்தும் நெருக்கடிதான். இதனால் டென்சன்.

பிறகு என்ன? படப்படப்பு, சோர்வு இவைகள் ஏற்பட்டு இதயத் துடிப்பு சீரற்று வேகமாக இயங்க ஆரம்பித்து மேலும் நிலைகுலைத்து விடும்.

மன அழுத்தம், சோர்வு இல்லாத நபர்களே இல்லை என்று கூறலாம். அந்த அளவிற்கு எங்கு பார்த்தாலும் ஒரே பதட்டம் தான்.

பணி நேரம் போக மீதி நேரங்களில் உடற்பயிற்சி, நடைபயிற்சி, யோகா இவற்றில் ஈடுபட்டு ஆசுவாசப்படுத்திக் கொள்ள முடியும். ஆனால் இந்த அவசர உலகில் அதற்கெல்லாம் ஏது சார் நேரம்?


பணி நேரங்களில் இவ்வாறு ஏற்படும் மனச்சோர்வு, அழுத்தம் இவைகளிலிருந்து உடனடியாக விடுபட நவீன கருவியை உருவாக்க நிபுணர்கள் முயற்சித்து வருகிறார்கள். இதை உள்ளங்கையில் வைத்திருந்தாலே போதும் உங்களுடைய இதயத் துடிப்பு மற்றும் பிற உறுப்புகளிலுள்ள மாற்றங்களை அளவீடு செய்து உங்களை சீரான நிலைக்கு கொண்டுவர உதவி புரிகிறது. அதைப் பற்றி மேலும் காண்போம்.

அமெரிக்காவின் நியூயார்க்கிலுள்ள ஹெலிகார் நிறுவனத்தைச் (Helicor Inc) சேர்ந்த உட் மற்றும் அவருடைய வணிக நண்பர் ஆடம் போர்ப்ஸ் கூட்டணியில் இந்த நவீன தொழில்நுட்பம் வாய்ந்த கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கைக்கு அடக்கமாக இருக்கும் இந்த கருவியை உள்ளங்கையில் வைத்துக் கொண்டு அது கட்டளையிடுவதற்கேற்ப மூச்சை உள்ளிழுத்து அது கட்டளையிடும் போது மூச்சை வெளிவிட வேண்டும். Stress Eraser என்றழைக்கப்படும் இதன் மூலம் உங்கள் இதய துடிப்பை துல்லியமாக கணக்கிட்டு அறிவிக்கும்.

இக் கருவி இதய நாளங்களின் ஆக்சிஜனை அளவிடும் Ox-i-m-eter -உடன் திரை மற்றும் நுண் செயலியுடன் (Mi-c-r-o-p-r-o-c-essor) இணைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது. இது கைவிரல்களின் தோலில் இருந்து கிரகிக்கப்படும் ஒளியின் வேறுபாடுகளை அறிந்து இதயத்துடிப்பை கணக்கிடும். இந்த Stress Eraser இதயத் துடிப்பை கண்காணிப்பதின் மூலம் சஞ்சாரி நரம்பு எனப்படும் `வேகஸ்` நரம்பின் (Vagus) செயல்பாடுகளையும் துல்லியமாக கணக்கிடும். சஞ்சாரி நரம்பு கிட்டத்தட்ட மூளையிலிருந்து வரும் 12 நரம்புகளில் ஒன்றாகும். இது இதயம், சுவாசப்பை, வயிறு மற்றும் குடல்களில் காணப்படும் இதர உறுப்புகளை ஒன்றுடன் ஒன்று இணைக்கிறது. இந்நரம்பு மூளையிலிருந்து வரும் பல்வேறு விதமான மெல்லிய சமிக்ஞைகளைக் கூட அறியும் தன்மை வாய்ந்தது.

இதயத்துடிப்பில் மாற்றங்களை வைத்து சஞ்சாரி நரம்பின் செயல்பாடுகள் மற்றும் தன்மைகளில் என்ன ஏற்பட்டிருக்கிறது என்பதை அறிய முடிகிறது என்பதை கடந்த பத்தாண்டுகளாக நிபுணர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் அறிந்துள்ளனர். இதயத் துடிப்பு அதிகமாகும்போது சஞ்சாரி நரம்பின் வேகமும் அதிகமாகிறது. உட் மற்றும் திரு. போர்ப்ஸ் கடந்த 4 ஆண்டுகளாக இந்த ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். இக்கருவியிலுள்ள அளவீடுகள் சஞ்சாரி நரம்புகள் வேகம் மற்றும் பதட்டம் அடையும்போது முன்னெச்சரிக்கை செய்கிறதும். மேலும் திரையில் ஓடும் அலைவரிசையில் ஆரம்ப புள்ளி மற்றும் முடிவடையும் புள்ளியை காணமுடிகிறது.

இப்படிப் பெறப்படும் அனைத்து விபரங்களின் உதவியோடு பிநஞ்க்சூசூ -உ-சு-ஹசூக்சுபீ நீங்கள் சோர்வு மற்றும் மன அழுத்தங்களிலிருந்து விடுபட்டு ஹாயாக இருப்பதற்கு பேருதவி புரிகிறது. இந்த நஞ்சுக்சூசூ- உசுஹசூக்சு பயன்படுத்துவதற்கு இலகுவாகவும், மிருதுவான உலோகத்தினால் வடிவமைக்கப்பட்டுள்ளது. மூன்று பொத்தான்கள் மூலம் இதனை இயக்கலாம்.

தற்பொழுது இதனுடைய விலை 399 அமெரிக்க டாலர்கள் (இந்திய ரூபாயில் 18 ஆயிரம்) ஆகும். இது ஒரு டாக்டரின் சிபாரிசு மூலமே வாங்குவதை நோக்கமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டாலும் யாரும் வாங்கலாம். இது சாதாரணமான ஒரு கருவியாக வடிவமைக்கப்படவில்லை. அமெரிக்க அரசாங்கத்தின் உணவு மற்றும் மருந்தியல் நிர்வாகத் துறையினரால் அங்கீகாரத்தோடு வடிவமைக்கப்பட்டு இரண்டு சோதனைகளும் நடத்தப்பட்டிருக்கிறது.

அவசர உலகில் நம்முடைய உடம்பை கவனித்துக் கொள்வதற்கு நேரம் ஒதுக்க முடிவதில்லை. சிலருக்கு சாப்பாட்டு நேரத்திலும் வேலைதான். இதெல்லாம் கடைசியில் உடல்நிலையை பாதித்து உறுப்புகளை சீரற்று இயங்குவதற்கு வழிவகுத்து விடுகிறது. இதனாலேயே யோகா மற்றும் உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. ஆனால் அதற்கும் வழியில்லாதவர்களுக்கு இப்பொது எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் நம்முடைய மன அழுத்தங்களை குறைத்து நம்மை அமைதிப் படுத்தும் கருவி வந்திருப்பது ஒரு வரப்பிரசாதம் தான்.



தொடரும்...

எம்.ஜே.எம்.இக்பால்
 

 

http://www.dailythanthi.com/Irmalar/home/second_page.asp?issuedate=4/29/2006&secid=76