அறிவியல் அதிசயம் - MJM Iqbal

14-10-2006

Refer to Your Friends

அதிநவீன சக்கர நாற்காலி ரோபோ

மனிதனை தொற்றிக் கொள்ளும் விதவிதமான நோய்கள் தீவிரமடைந்து உயிரை பறித்துக் கொள்கின்றன. அல்லது முக்கிய உறுப்புகளை செயல் இழக்க செய்து படுக்கையறைக்கு தள்ளி விடுகின்றன. இதனால் எழ முடியாமல், நடக்க முடியாமல் தங்கள் வாழ்க்கையை நகர்த்துகின்றனர். சிறந்த மருத்துவ சிகிச்சைக்கு கட்டுப்பட்டு நோய் நீங்கினால் மட்டுமே அவர்களின் பழைய வாழ்க்கை திரும்பும். ஆனால் என்னதான் மருத்துவ சிகிச்சையை எடுத்துக் கொண்டாலும் சில வகை நோய்களை எளிதாக போக்க முடிவதில்லை. கால், கைகள் செயல் இழந்த நிலையில் தள்ளு வண்டியில் பயணம் செய்யும் நோயாளிகளுக்கு உதவி செய்யும் நோக்கில் விஞ்ஞானிகள் புதுமையான சக்கர ரோபோ ஒன்றை கண்டுபிடித்து அறிமுகப்படுத்தி உள்ளனர்.

தேசிய தொழில்நுட்ப தரக்கழக பொறியாளர்களும், விஞ்ஞானிகளும் சேர்ந்து துணையின்றி நடக்க, எழமுடியாத மனிதர்களுக்கு உதவி செய்யும் நோக்கில் மருத்துவ ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். பல வகையான ஆய்வின் முடிவில் ரோபோ ஒன்றை தயாரிக்க திட்டமிட்டனர். சக்கர நாற்காலியில்தான் பயணம் செய்ய முடியும் என்ற நோயாளிகள் யாருடைய துணையும் இன்றி தனியாகவே செயல்படும் அளவில் இருக்க வேண்டும் என்பது ஆய்வின் இலக்கு. இந்த ஆய்வும் வெற்றி பெற்று புதிய ரோபோவும் உருவாகிவிட்டது.

இந்த ரோபோ நோயாளிகளை பிடித்து அழைத்து செல்லும், நிற்க வேண்டிய இடத்தில் நிற்கும், சுற்றி வர வேண்டிய இடத்தில் சுற்றி வரும். உயரத்தில் இருக்கும் புத்தக அலமாரியில் உள்ள புத்தகத்தை எடுக்க வேண்டும் என்றால் கூட மேலே எழும்பி எடுக்க வழிவகை செய்யும். இந்த ரோபோக்களினால் நோயாளிகளுக்கு எந்த பிரச்சினையும் ஏற்படாது. சாதாரணமாக ஒருவரின் துணையுடன் நடந்து செல்லும் நோயாளிகள் விழுந்து விட வாய்ப்புகள் உள்ளது. அல்லது எதிலாவது மோதிக் கொள்ளலாம். இதனால் காயங்கள் கூட ஏற்படலாம். ஆனால் ஏகடத ரோபோ உதவியுடன் பயம் இல்லாமல் பாதுகாப்பாக நோயாளிகள் செல்லலாம்.


இந்த ரோபோவின் நாற்காலியில் இயங்கக்கூடிய மோட்டார் பேட்டரிகள் மற்றும் மின்னணு தொழில்நுட்பம் மூலம் நோயாளிகளை தூக்கிச்செல்லும். அப்போது மைய ஈர்ப்பு விசையுடன் பூமியில் பொருந்தி நடக்கக்கூடிய அளவில் தொழில்நுட்ப வசதி அமைந்துள்ளது. இந்த சக்கர நாற்காலி 160 கிலோ எடையுள்ள மனிதனைக்கூட எளிதாக அழைத்து சென்று உதவி செய்யும். படுக்கையிலிருந்து தூக்கிவிடும். நடக்க உதவி செய்யும். பாத்ரூமிற்கு அழைத்து செல்லும். அதுமட்டுமல்ல நோயாளி உட்கார்ந்து இருக்கும்போது பொருட்களை எடுக்கும் போது சில சமயம் தடுமாறி விழக்கூடிய நிலை ஏற்பட்டால் கூட ரோபோ நாற்காலியில் பாதுகாப்பு காரணிகள் கீழே விழாமல் பாதுகாப்பு அளிக்கும்.

இந்த விஷேச சக்கர நாற்காலி ரோபோவில் நோயாளிகள் காலை எளிதாக தொங்க விட்டு கொள்ளலாம். கால், கைகளுக்கு பயிற்சி அளிக்கலாம். இப்படி பல வசதிகளைக் கொண்ட இந்த ரோபோ வினாடிக்கு 27 அங்குலம் அதாவது நிமிஷத்திற்கு 42 மீட்டர் வேகத்திற்கு செல்லக்கூடிய தன்மை கொண்டது. இந்த ரோபோ நிச்சயமாக மருத்துவ துறையில் மனித குலத்திற்கு மிகவும் பயன்படக்கூடிய ரோபோ என்றால் மிகையாகாது.



போர்களங்களில் சண்டையிடும் அதிநவீன ரோபோட்டுகள்

ரோபோக்களின் உலகம் பற்றி பலவிதங்களில் கேள்விபட்டு அதிசயித்து வருகிறோம்! இனி வரும் காலங்களில் பாதுகாப்பு பலமான தரைப்படை, கடற்படை, விமானப்படை எதுவாக இருந்தாலும் அது ரோபோ உலகமாகவே இருக்கும் என்பது நிச்சயம். சிறுபிள்ளைகள் திண்ணையில் உட்கார்ந்து கதைகள் பேசும்போது ஆயிரமாயிரம் அதிசயங்களும், வியக்கும் தகவல்களும் புராணங்கள் வாயிலாக வந்து போகும். அது எல்லாம் நிஜமாகிவிடும் என்று அப்போது யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். இன்றைய காலத்தில் சிறுவர்கள் கதைகள் பேசாமல் புராணங்களில் பேசியதை கம்ப்ïட்டரில் கார்ட்டூன் விளையாட்டுகளாக விளையாடிப் பார்க்கின்றார்கள். எல்லாம் உண்மையாக போகிற காலம் வெகு தொலைவில் இல்லை என்கிறது விஞ்ஞானம். எப்படி இருநூறு ஆண்டுகளுக்கு முன் விமானம், ராக்கெட் பற்றி பேசி இருந்தால் மக்கள் நம்பி இருக்கவே மாட்டார்களோ அதுபோலத் தான் இப்போது ரோபோ உலகம் பற்றி பேசுவது.

ரோபோக்கள் வீட்டு வேலைகள் மற்றும் முக்கிய தகவல் தொழில்நுட்ப வேலைகளை பார்ப்பது பற்றிப் பார்த்தோம். இப்போது படைக்குத் தயாராகும் ரோபோக்களை பற்றி இந்த வாரம் அறிந்து கொள்ளலாம். இருநாட்டுப் போர் வீரர்கள் துப்பாக்கியால் குண்டு மழை பொழிவார்களோ அதே போல் இரு நாட்டு ரோபோக்களும் போர் புரியும் வாய்ப்பும் உள்ளது.

1987-ல் பால் வெயின் ஈவன் தச்ஸச் இச்சி என்ற படத்தில் இன்னும் 20 வினாடிக்குள் உங்கள் ஆயுதங்களை போட்டுவிட்டு சரணடையுங்கள்' என்று கட்டளையிட அவர் ஆயுதங்களை போட்டுவிடுவார். ஆனால் ரோபோவில் உள்ள மென்பொருள் புரோகிராம் தவறுகளை கையாள ஆரம்பித்துவிடும். இப்படி படம் போகும். கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் முடிந்து இதுபோன்ற படக்காட்சிகள் நிஜக் காட்சிகளாக வர இருக்கின்றது என்று ரோபோ விஞ்ஞானிகள் கூறுவதுதான் விஷேசம். அதுமட்டுமல்ல போரின் போது ரோபோக்கள் நம் படையினை சேர்ந்தவர்கள் யார்? எதிராளிகள் யார்? என்பதும் தெரிந்துவிடும் அளவிற்கு மென்பொருள் ஆராய்ச்சி முடியும் தருவாயில் இருப்பதாகவும் வரும் காலங்களில் இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட பகை உணர்வுகளில் ஏற்பட்ட யுத்தத்தால் ரோபோக்கள் ரிமோட் கண்ட்ரோல் மூலம் தாக்கப் பயன்பட்டது.


அதற்கு பதிலளிக்கும் பொருட்டும் அடுத்த நாடும் தாக்கியது என்று நாம் செய்திகளில் பார்க்கக்கூடிய காலம் வரப்போகிறது என்றால் அது உண்மைதான் என்கிறார் ஒரு ஆய்வாளர். போர் களத்தில் குதிக்கும் ரோபோக்கள் வைத்திருக்கும் இயந்திர துப்பாக்கியில் குண்டுகள், கத்தி இருக்கும் எனவும் இவை அமெரிக்க படையின் தரக்கட்டுப்பாட்டு அலுவலகத்தால் சான்று  அளிக்கப்பட்டு இருப்பதாகவும் மேலும் கூறியுள்ளார்.

இப்போது தயாராகும் இண்டலிஜெண்ட் ரோபோட்டுகள் 20 சுற்றுகள் குண்டுமழை பொழியும் அளவிற்கு தயார் செய்யப்பட்டுள்ளது. ஜோ டையர் என்னும் ஐரூதச்ஸச்ஞ் விஞ்ஞானி கூறுகிறார் "தற்போது தயாராகி போர்களத்திற்கு வர இருக்கும் ஐரூதச்ஸச்ஞ் -கள் 24 வெவ்வேறு குண்டுகள் மழை பொழிவுகளை ஏற்படுத்தக்கூடியது மட்டுமின்றி பெரிய பரப்பளவையும் ஆக்கிரமிப்பு செய்யும் தன்மை கொண்டது. அதுமட்டுமல்ல யானையைக் கூட குண்டுமழையில் துளைக்க செய்து சின்னாபின்னபடுத்தக்கூடிய அளவிற்கு வல்லமை மிக்கது'' என்கிறார். மற்றொரு வகையயைச் சேர்ந்தது கத்தி ரோபோ. அதாவது இந்த ரோபோ பயன்படுத்தும் கத்தி அதிநவீன நுட்பங்களைக் கொண்ட கைபோல் இயங்கும் தன்மை கொண்டது. இந்த கத்தி ரோபோட்டுகள் நகர்புறங்களில் நடக்கும் சண்டைகளிலும், கூட்டங்களை ஓட ஓட விரட்டவும் செய்யும் என்கின்றார்.

தற்போது ஐரூதச்ஸச்ஞ் மற்றும் கத்தி ரோபோட் இரண்டும் மனிதனால் தூரத்தில் இருந்துகொண்டு தொலைதூர இயக்கி  மூலம் கட்டளையிடப்படுவதாக தெரிகிறது என்றாலும் விரைவில் அவை சுதந்திரமாக தன்னிச்சையாகக் கூட செயல் படக்கூடிய அளவிற்கு வரவேண்டும் என்றும் கூறுகின்றனர். தன்னிச்சையாக செயல்பட ரோபோட்டுகளை அனுமதிக்கும் பட்சத்தில் நடமாடும் ரோபோட்டுகளில் யார் ஒத்துழைப்பு கொடுக்கும் ரோபோட்டுகள் (சக போராளி), யார் எதிர்ப்பவர்கள் என்பதனை அறிந்து கொள்ளும் அளவிற்கு உணரி மற்றும் மென் பொருட்களை கொண்டதாக இருக்க வேண்டும். அந்த ஆராய்ச்சி வெகு தீவிரமாக நடந்துவருவதாக அமெரிக்க பெண்டகன் ஆராய்ச்சி நிலையம் கூறுகிறது.

எது எப்படியோ விஞ்ஞான ஆய்வின் வளர்ச்சியினை பாராட்ட வேண்டியதுதான். படைப்புகளில் உயர்ந்த படைப்பான மனித இன அழிவுக்கு என்றில்லாமல் மனிதனுக்கு பயன்படும் வகையில் அமைந்தால் சரி. வேதங்களில் கூறப்படும் ஒரு வாக்கியம் நினைவுக்கு வருகிறது. கடவுள் மனிதனை தன்னுடைய பிரதிநிதியாக படைக்கப் போகிறேன் என்று கூறியபோது, அதற்கு தேவர்கள் "ஒருவருக்கொருவர் சண்டையிட்டு ரத்தம் சிந்திக் கொள்ளும் மனிதர்களையா உன்னுடைய பிரதிநிதியாக படைக்கப்போகிறாய்'' என கூறினார்களாம். அதற்கு கடவுள் அவர்கள் அறிவில் உங்களைவிட சிறந்தவர்கள்'' என்று கூறினாராம். மனிதன் ஆக்கப்பணிகளுக்காக தன்னுடைய ஒப்பற்ற அறிவை பயன்படுத்தினால் உலகம் சமாதானத்தில் திளைக்கும் என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ளுதல் அவசியம்.



 

 

http://www.dailythanthi.com/Irmalar/home/second_page.asp?issuedate=9/2/2006&secid=76