|
முஹமதியா
மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் சாதனையை பாராட்டி வந்த
மடல்கள் |
|
எல்லாப்
புகழும் அல்லாக்வுக்கே!
நம் தாய்ச்சபையாம் முஸ்லிம் தர்ம பரிபாலன சபாவின் செல்லக்
குழந்தையும் சாதனைச் சரிதமுமான முகம்மதியா மேல்நிலப்
பள்ளியின் மாணவ மாணவிகள் இந்த ஆண்டு நடைபெற்ற பத்தாம்
வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு அரசுத் தேர்வுகளின் பெருமளவு
மதிப்பெண்கள் பெற்று மிகச் சிறந்த வெற்றியினைப் பெற்று
நம்மையெலாம் மகிழ்வித்திருக்கிறார்கள்.
இது நமது சபாவுக்கும், பள்ளிகளின் நிர்வாகக் குழு, பள்ளித்
தாளாளர், தலைமை ஆசிரியர், சக ஆசிரியப் பெருமக்கள் மாணவச்
செல்வங்கள் அனைவரது கடின உழைப்புக்கும் இறைவனுடைய
உதவியினால் கிடைத்த வெற்றியாகும்.
பல வருடங்களுக்கு முன் ஒரு ஜமாஅத் பொதுக்கூட்டத்தில் நம்
ஊர்ப் பெரியவர் ஒருவர், ஜமாஅத்தின் பணம் எல்லாவற்றையும்
பள்ளிக்கே கொட்டித் தீர்க்கிறீர்களே, ஜமாத்துக்கு சொத்து
வாங்கிப் போட்டால் பிரயோஜனமாக இருக்குமே என்று ஒரு
ஆதங்கத்தில் - எரிச்சலில் சொன்னார். அப்போது 'இன்ஷா அல்லாஹ்
கல்வியின் பயன் பின்னால் தெரியும்' என்றேன்.
இன்று நாம் இப்பள்ளியின் மூலம் நமது இளந்தலைமுறையை
அடிப்படைக் கல்வி பெற்ற ஒரு சமுதாயமாக உருவாக்க
முடிந்திருக்கிறது என்பது மிகப் பெரிய நிறைவை அளிக்கிறது.
மென்மேலும் நம் பள்ளி வெற்றிகளைக் குவிக்கவும் நம்
பிள்ளைகள் கல்வி ஒழுக்கங்களில் சிறந்தவர்களாக வாழ்வில்
உயர்ந்து சிறக்கவும் என் வாழ்த்துக்களையும்
பிராத்தனைகளையும் பதிவு செய்கிறேன்.
டாக்டர் ஹிமானா சையத்
சிங்கப்பூர்
31 -05 -2008
|
|
சீர்மிகு சித்தார் கோட்டையினில்,
பேர் மிகு நம் பெருமனாரின் (ஸல்) பேரிய பெயர் பெற்ற,
முஹம்மதியா மேல்நிலைப் பள்ளியினில்
பத்தாம்
வகுப்பின் தேர்வு முடிவில்
தமிழத்தில் முதலாய் வந்த மாணவியை விட-
ஈர் ஐந்து மதிப்பெண்களே
பின் பெற்ற முத்தான நம் முதல் மாணவிக்கும்,
நானூறுக்கதிகம் பெற்ற நன்
முத்துக்களுக்கும்,
வெற்றிபெற்ற கண்மணிகளுக்கும்,
கல்வி அமூதூட்டிய ஆசான்களுக்கும்,
அன்போடு வழிநடத்தும்
தாய்ச்சபைக்கும்,
இப்பெறும் பேர் பெற்று தந்த
வல்லோனுக்கும்
என்றென்றும் நன்றி உரித்தாகுக.
நேசத்துடன்
செள. அஹமது இபறாஹிம்,
பழைய மாணவர்கள் - சௌதி அரேபியா கிழக்கு மண்டலம் சார்பாக...
|
| |
|